அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். செப்.21 முதல் 27 வரை 7 நாட்களுக்கு அவர் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி 7 நாட்கள் அரசு முறை பயணமாக, நேற்று செப்டம்பர் 20 ஆம் தேதி இரவு டில்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
பிரதமர் தனது அமெரிக்க பயணத்தில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. நியூயார்க்கில் நடைபெறும், 74வது ஐநா பொதுச் சபை கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார் மோடி. இது தவிர ஹவுஸ்டனில் நடக்கும் இந்திய வம்சாவழியினர் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.