சூயஸ் நிறுவனம் குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக் கோரி திமுக போராட்டம்

சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக் கோரி கோவையில் திமுக தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சூயஸ் நிறுவனம் குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக் கோரி திமுக போராட்டம் 1
கோவையில் நடைபெற்ற திமுக போராட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோக உரிமையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

விளம்பரம்

இதனால் மக்கள் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் நிறுவனங்களுக்கு உரிமை வழங்கப்பட்டால் பின்னர் அவர்கள் சொல்வது தான் சட்டம் என்பது போல் ஆகிவிடும் என அனைத்து தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த உரிமையை ரத்து செய்யக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சூயஸ் குடிநீர் உரிமையை ரத்து செய்யக்கோரியும், குடியிருப்பு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதை கைவிடக் கோரியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடையவை  நாடு முழுக்க என்.ஆர்.சி திட்டம் இல்லை!

சூயஸ் குடிநீர் திட்ட ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க மறுப்பதாகவும் குடிநீர் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

அதே நேரத்தில் காவல்துறை ஜனநாயக ரீதியாக போராட்டங்களுக்கும் கூட ஆளுங்கட்சி நிர்ப்பந்தம் காரணமாக அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினர். இதே போக்கு நீடித்தால் காவல்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment