நாடு முழுக்க என்.ஆர்.சி திட்டம் இல்லை!

தேதிய அளவில் குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுக்க என்.ஆர்.சி திட்டம் இல்லை! 1
குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நடைபெறு வரும் போராட்டம்

சமீபகாலமாக மத்திய அரசின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கும், விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் படி நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது.

விளம்பரம்

இப்போராட்டம் இன்னும் முடிவடையாத நிலையில், அதன் காம்போவான தேசிய குடிமக்கள் பதிவேற்றம், தேச மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசு திணிக்க முயன்று வருகிறது.

இந்நிலையில், மக்களவையின் கேள்வி நேரத்தின் போது சந்தன் சிங் மற்றும் நாகேஸ்வர் ராவ் ஆகியோர் தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவதற்கான திட்டம் ஏதும் உள்ளதா? அவ்வாறு கொண்டு வந்தால் அது எப்போது நிறைவேற்றப்படும்?

விளம்பரம்

இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா? தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிராகரித்து மாநிலங்கள் ஏதேனும் அனுப்பிய கடிதம் உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தரப்பில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment