பாரத் நெட் சென்டர் முறைகேடு குறித்து திமுக எம்எல்ஏ கேள்வி

பாரத் நெட் பெட்டர் டெண்டர் குறித்த முழு விவரங்களையும் அமைச்சர் வெளியிடுவாரா என திமுக எம்.எல்.ஏ பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரத் நெட் சென்டர் முறைகேடு குறித்து திமுக எம்எல்ஏ கேள்வி 1
பெரியசாமி எம்.எல்.ஏ

அனைத்து மாநிலங்களிலும் உள்ள, கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை, இணையதளம் வழியாக, மக்கள் பெற வசதியாக, ‘பாரத் நெட்’ என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகளும், ‘ஆப்டிக்கல் பைபரால்’ இணைக்கப்படுகின்றன. அதனால், மக்கள் இணைய தளம் வழியாக, அரசின் சேவைகளை பெறமுடியும்.

விளம்பரம்

இதுகுறித்து திமுக எம்எல்ஏ பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத் நெட் திட்ட டெண்டரில் பங்கு தெரியாது ஒன்னுமில்ல முறைகேடு என்பது அடிப்படை ஆதாரம் இல்லாத கற்பனையான ஒரு பொய் என அமைச்சர் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என குற்றம்சாட்டி உள்ளார்.

20.1.2020-ஆம் தேதி டெண்டருக்கு இறுதி தேதி என்பதால்- அது தொடர்பான Pre-Bid Meeting நடைபெற்றதா அல்லது ரத்து செய்யப்பட்டதா? அதை விளக்கும் துணிச்சல் அமைச்சருக்கு உண்டா? இந்த இறுதி தேதிக்குப் பிறகு தகவல் தொழில் நுட்பச் செயலாளர் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். “விருப்ப ஓய்வில்” சென்றதாகச் செய்திகள் வெளிவந்தது ஏன்? 27.1.2020 அன்று அவரும், தமிழ்நாடு பைபர்  நெட் கார்ப்பரேஷனுக்கு நிர்வாக இயக்குநராக இருந்த எம்.எஸ். சண்முகம் ஐ.ஏ.எஸ்-ஸும் திடீரென்று “டம்மி” பதவிகளுக்கு பழிவாங்கும் நோக்கில் தூக்கியடிக்கப்பட்டது ஏன்? டெண்டர் இப்போதுதான் கோரப்பட்டுள்ளது என்றால் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் (DIPR/4685/Tender/2019) என்ன ஆயிற்று? அறிவிக்கப்பட்டபடி 22.1.2020 அன்று மேற்கண்ட அந்த நான்கு பேக்கேஜ்கள் அடங்கிய டெண்டர் திறக்கப்பட்டதா இல்லையா?  என அடுக்கடுக்கான கேள்விகள் பாரத் நெட் உள்கட்டமைப்புப் பணிகளின் டெண்டரில் அணி வகுத்து நிற்கின்றன. 

விளம்பரம்
தொடர்புடையவை  கேப்டனுக்கு என்ன ஆச்சு.? திடீரென வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்.! வீடியோ உள்ளே.!

பாரத்நெட் டெண்டரில் நடைபெற்றுள்ள திரைமறைவு ரகசியங்களை விசாரித்தால் – இந்த டெண்டர் தகவல் தொழில் நுட்பத் துறையின் 9 ஆவது ஊழல் அதிசயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே உதயகுமாருக்கு நான் சவால் விடுகிறேன்.

பாரத் நெட் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்றால், 22.1.2020 அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட “பாரத் நெட்” டெண்டர் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? தகவல் தொழில் நுட்பச் செயலாளர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் முதல்வர் உள்ளிட்ட அனைவர் மட்டத்திலும் இந்த டெண்டர் குறித்து நடைபெற்ற  பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? பாரத் நெட் டெண்டர் குறித்த கோப்புகளில் உள்ள குறிப்புகளை அமைச்சர் வெளியிடத் தயாரா? என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment