ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்!

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்! 1
ஆதிச்சநல்லூர்

இது தொடர்பாக அவர் கூறுகையில், தொல்லியல் துறையில் சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

விளம்பரம்

மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சுற்றுலாத் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். ராஞ்சியில் பழங்குடியினருக்கான  அருங்காட்சியகம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக 65வது இடத்தில் இருந்த இந்தியா 34வதுஇடத்துக்கு முன்னேறியுள்ளது. 

விளம்பரம்

மேலும், சுற்றுலா துறை வளர்ந்து வருவதால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தியாவில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வுகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Leave a Comment