2020 மத்திய பட்ஜெட்: ஒளவையாரை மேற்கோள்காட்டிய நிர்மலா

நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டின் முதல் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையை சந்தித்து வருகிறது. கிராம புற மக்களிடம் நுகர்வு தன்மை குறைந்திருப்பதால் தினசரி விற்பனையாகும் பொருட்களின் சந்தைகள் குறைந்து விட்டன.

விளம்பரம்
2020 மத்திய பட்ஜெட்: ஒளவையாரை மேற்கோள்காட்டிய நிர்மலா 1
நிர்மலா சீதாராமன்

மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உள்ள குளறுபடிகளால் கடன் வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் குறைந்தும் போய் விட்டன.

இது மட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட நிதி அமைச்சகம், அதன் மூலம் நேரும் இழப்பீட்டினை சரி செய்ய போதிய அளவிலான நடவடிக்கைளை மேற்கொள்ள வில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

விளம்பரம்

இதனால் இன்று வெளியாகும் மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பினை கொண்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டை வாசித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆத்திசூடியை மேற்கோள்கட்டி உரையை தொடங்கினார்.

விளம்பரம்

“மூன்று மூன்று வார்த்தைகளில் பல முக்கிய விஷயங்களை ஔவையார் அழகுத் தமிழில் சொல்லியிருக்கிறார். அதில் குறிப்பாக ‘பூமி திருத்தி உண்’ என்ற மூன்று வார்த்தைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஔவையார் கூறியுள்ளார்”

  • இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
  • வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்சி செயல்படுத்தப்படும்
  • தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.
  • 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.
தொடர்புடையவை  வேலைவாய்ப்பு உருவாக்க எண்ணிக்கை சரிவு!

தனது உரையில் பல முக்கிய கூறுகளை நிதி அமைச்சர் கூறி வருகிறார்.

விளம்பரம்

Leave a Comment