PAN கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான தேதி மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளத. 30 கோடிக்கு மேற்பட்ட PAN கார்டை குறியீட்டுடன் அரசாங்கம் இணைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனவரி 27, 2020 நிலவரப்படி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொத்த நிரந்தர கணக்கு எண்கள் (PAN) 30,75,02,824 என்று தாகூர் மக்களவைக்குத் தெரிவித்தார். ஆதார் – PAN இணைப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்திருக்கிறதா என்று கேட்டதற்கு, அமைச்சர் “ஆம் சார்” என்று உறுதியுடன் பதிலளித்தார்.
மேலும், அமைப்புகளை கையாள்வதன் மூலம் முக்கியமான தரவு கசிந்து விடாமல் பார்த்துக் கொள்ள, இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன, என்றார். தரவுகளின் ரகசியமாக பராமரிக்கப்படும் வருமான வரி சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.