தவறுகளை ரகசியமாக திருத்திய நிதி அமைச்சகம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் உள்ள குளறுபடிகளை இரகசியமாக திருத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

nirmala-sitharaman
நிர்மலா சீதாராமன்

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் நகல் பிடிஎப் மற்றும் எக்செல் ஆகிய வடிவங்களில் வழங்கப்பட்டன.

இது குறித்து ஆராய்கையில் இந்த இரண்டு வடிவங்களிலும் வழங்கப்பட்டிருந்த தொகைகள் எண்ணிக்கை வேறுபட்டிருந்தது.

எனவே இந்த குளறுபடிகள் தொடர்பாக இந்தியா டுடே நிறுவனம் சார்பில் நிதி அமைச்சகத்திற்கு புகார் அனுப்பட்டதாகவும், ஆனால் நிதி அமைச்சகம் பதில் அனுப்பாமல் ரகசியமாக அத்தனை திருத்தி அமைத்ததாகவும் கூறியிருக்கிறது.

டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு:
PDF கோப்பில் உள்ள படம்: ரூ .1,318.86 கோடி;
எக்செல் கோப்பில் உள்ள படம்: ரூ .1,166.86 கோடி
இந்த திட்டத்திற்கு ரூ.152 கோடி வித்தியாசம் ஏற்பட்டது.

டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு:
PDF கோப்பில் உள்ள படம்: ரூ .885.6 கோடி;
எக்செல் கோப்பில் உள்ள படம்: ரூ .753.60 கோடி
இதில் ரூ.132 கோடி வித்தியாசம்

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கான ஒதுக்கீடு:
PDF கோப்பில் உள்ள படம்: ரூ 3,489.96 கோடி;
எக்செல் கோப்பில் உள்ள படம்: ரூ .33.199.96 கோடி
இதில் ரூ .290 கோடி வித்தியாசம்

பி.ஜி.ஐ.எம்.ஆர், சண்டிகருக்கு ஒதுக்கீடு:
PDF கோப்பில் உள்ள படம்: ரூ 1426.53 கோடி,
எக்செல் கோப்பில் உள்ள படம்: ரூ .1,551.53 கோடி
இதில் ரூ .125 கோடி முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இது போன்ற 14 துறைகளுக்கான தகவலில் மத்திய நிதி அமைச்சகம் கவன கோளாறு காரணமாக தொகையை மாற்றி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்