மோடியின் அரசியல் பொருளாதாரம்: கடந்த ஐந்து கால திட்டம், பகுதி 1

ஜனநாயகக் கொள்கைக்கு ஏற்றவாறும், சந்தைக்கு ஏற்றவாறும் ஒத்திசைவான நடவடிக்கைள் தான் தற்போதைய தேவையாக இருக்கிறது.

தற்போதைய இந்திய பொருளாதாரம் கடுமையான குளிரால் திணறி வருகிறது. பொருளாதார சுருக்கம், மக்களிடம் ஏற்பட்ட நுகர்வு பலவீனம், குறைந்து போன தனியார் முதலீடுகள், மோசமான ஏற்றுமதி திறன் மற்றும் முதலீடுகளுக்கு ஏற்ற கடன் வழங்காமை போன்ற அறிகுறிகள் தென்படுகிறது.

விளம்பரம்

சீரற்ற, பொருத்தமில்லாத மற்றும் செயலற்ற அரசியல் பொருளாதார நிர்வாக கட்டமைப்பின் விளைவாக பொருளாதார சுருக்கம் ஏற்படுள்ளது.

இந்திய பொருளாதாரம் எவ்வளவு கடுமையான மந்தநிலையை எதிர்கொள்கிறது? என்பதை புரிந்து கொள்ள மோடியின் முதல் மற்றும் இரண்டாம் ஆட்சி காலத்தின் பொருளாதார நடவடிக்கைகளை கவனமாக படிக்க வேண்டும்.

விளம்பரம்

அதிக வருமானமுடைய வேலைவாய்ப்புகள், அதிகளவிலான வணிக முதலீடு வாய்ப்புகள் உருவாக்கம், தனியார்மயமாக்கல் விகிதங்கள் அதிகரிப்பு, குறைந்தபட்ச ஊழல் என நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று தொடங்கியது மோடியின் முதலாவது ஆட்சி.

“குறைந்தப்பட்ச அரசு, அதிகபட்ச அரசாங்கம்” என்ற முழக்கம் அனைவரின் கவனத்தையும் பெற்று விட்டது. “சிறிய அரசாங்கம், தனியார் துறையை விரிவாக்கம் செய்வது” போன்ற கதையாடல்களோடு வந்தவர்களின் வார்த்தைகளை நாம் தவறாக புரிந்துகொண்டுவிட்டோம்.

விளம்பரம்
தொடர்புடையவை  சென்னை ரியல் எஸ்டேட் உலகளவில் 5ஆம் இடம்
மோடியின் அரசியல் பொருளாதாரம்: கடந்த ஐந்து கால திட்டம், பகுதி 1 1

ஆனால் அவர்களுடைய அரசாங்கம் பெரியதாகவும், ஏகபோக ஆற்றல்களையும் கொண்டதாக இருந்தது. ஏதோ ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஓத்தான விளம்பரங்களையும், சந்தைப்படுத்தலையுமே பெரிய அளவில் செய்து வருகிறது. ஒரு பொருளை விநியோகம் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டது போல மோடியின் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

மோடியின் முதல் ஆட்சி காலமான 2014-19 பார்க்கும் போது, அடிமட்டம் வரை இருந்த ஊழல் குறைப்பு, சாலை வசதிகள், சமையல் எரிவாயு, கழிப்பறை போன்ற விடயங்களில் ஓரளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறது.

விளம்பரம்

இந்த ஓரளவு செயல்பாடே, மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கு, சாதாரண மக்களின் கற்பனை கதைகளை கைப்பற்ற போதுமானதாகவும் இருந்தது. மேலும் “தேசியம், தேசிய பாதுகாப்பு” போன்ற சொல்லாட்சிகளும் மோடிக்கு உதவியாக இருந்தது.

முதலாம் ஆட்சி காலத்தில் பார்த்ததை விட இரண்டாம் காலத்தில் தான் பொருளாதாரம் மற்றும் அரசியல் மட்டத்தில் மிக மோசமான அதிகார மையமாக்கல் நடந்தேறுகிறது. இந்த அரசாங்கத்தின் சந்தை அல்லாத மற்றும் வணிகம் அல்லாத கொள்கைகளால், நீண்டதொரு நிலையான வளர்ச்சியை கொண்டுவர சாத்தியமில்லை.

விளம்பரம்
தொடர்புடையவை  பாரத் நெட் திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கீடு

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் கழிப்பறைகள் கட்டப்படுவதை நாம் காணுகிறோம். ஆனால், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை உத்திகள் காணக்கிடைப்பதற்கில்லை.

இதே போன்று தான் மத்திய அரசின் மற்றோரு திட்டமான உஜ்ஜவாலா. கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு சமையல் எரிவாவு சிலிண்டர்களை வழங்கும் தேசிய அளவிலான திட்டமாகும். சிலிண்டர் இணைப்பை பெற்ற பெண்கள், அதனை மறுமுறை நிரப்புதலுக்கு எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டனர் என்பதற்கு எடுத்துக்காட்டு அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதே!

விளம்பரம்
மோடியின் அரசியல் பொருளாதாரம்: கடந்த ஐந்து கால திட்டம், பகுதி 1 3

அதேபோல், ஜன் தன் யோஜனா திட்டமும். குறிப்பிட்ட மக்களுக்கு குறைந்தப்பட்ட பணமில்லா கணக்குகள் தொடங்கப்பட்டது. பெரும்பகுதியினர் டெபாசிட் செய்யாதது அல்லது தங்களது நிதி தேவைக்கு இதனை பயன்படுத்தாது போன்றவரால், பரிவர்த்தனை அற்ற கணக்குகளாக மாறி போனது. இதனால் வங்கிகளுக்கு எந்த பயனும் இல்லாமல் போய் விட்டது.

இதைவிட மற்றோரு பெரிய திட்டத்தை மோடி அறிவித்தார். அது தான் ‘மேக் இன் இந்தியா’. தனியார் முதலீடு மற்றும் பிற அந்நிய முதலீடுகளை ஒருங்கிணைப்பதற்கான கொள்கையாக தேசிய அளவில் உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இந்தத்திட்டத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக மூலதனம் மற்றும் முதலீடுகள் குறைந்த அளவிலே இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழப்பமான முடிவுகளையும், யோசனைகளையும் அரசாங்கம் கொண்டிருந்தால், எத்தகைய திட்டமும் எதிர்வினைகளை சந்திக்கும் என்பது இந்த விவகாரத்தில் மூலம் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

விளம்பரம்
தொடர்புடையவை  வேலைவாய்ப்பு உருவாக்க எண்ணிக்கை சரிவு!

தொடரும்…

நன்றி: தி வயர்
தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு

விளம்பரம்

Leave a Comment