
மாடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெஹான வசிஷ்ட் என்பவர் மும்பையை சேர்ந்த நடிகை. (இவருக்கு வயது 31). 70க்கும் மேல் விளம்பரப் படங்களிலும், சில தெலுங்கு திரைப்படங்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மாத் தீவு பகுதியில் வெப் சீரீஸ் ஒன்றிற்கான ஷூட்டிங் நடைபெற்றது , இதில் கலந்துகொண்டு நடித்து வந்த கெஹான வசிஷ்ட் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனடியாக மலாத் பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனையில் நடிகையை அனுமதிருந்தனர்.
அவசர சிசிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் போதே நடிகைக்கு நாடித்துடிப்பு இல்லை என்றும் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்த பின்னரே அவரின் நாடித்துடிப்பு திரும்பி வந்தது என்றும், செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவரின் உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், இரண்டு நாட்களாக சரியான உணவு உட்கொள்ளாமல், சில எனர்ஜி பானங்களையும், மருந்துகளையும் மட்டுமே எடுத்துக் கொண்டதுதான் நடிகையின் இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.