Categories: சினிமா

கூட்டத்தில் திடீரென நயன்தாரா கையை பிடித்து இழுத்த நபர்..கண்ணாலேயே எரித்துவிடுவது போன்று முறைத்த நயன்தாரா

வெளியிட்டது

திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற நயன்தாராவின் கையை ரசிகர் பிடித்து இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக திருமணம் முடித்த கையோடு இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக தம்பதிகளாக சென்றனர் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், அப்போது அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. இருந்த போதிலும் இவர்கள் இருவரையும் தனி வழியில் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது. அங்கு குறைவான ஆட்களே இருந்த காரணத்தால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று சாமி கும்பிட்டனர் இருவரும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் திடீரென நயன்தாரா கையை பிடித்து இழுத்த நபர்..கண்ணாலேயே எரித்துவிடுவது போன்று முறைத்த நயன்தாரா 1

நயன்தாரா மங்களகரமாக மஞ்சள் நிற பட்டுப் புடவையும், விக்னேஷ் சிவன் பட்டு வேஷ்டி சட்டை, துண்டு ஆகியவற்றை அணிந்து இருந்தார். என்னதான் தனி வழியில் சென்று இருந்தாலும் நயன்தாரா வருகையை அறிந்து கொண்ட ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். அதனால் அவர்களை உடன் வந்தவர்கள் சூழ்ந்து கொண்டு வெளியேற உதவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நயன்தாரா கையை ஒருவர் பிடித்து இழுத்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கையை பிடித்து இழுத்த நபர் ஏற்பட்ட சலசலப்பினால் உடனே அங்கிருந்து விலகி ஓடிவிட்டார். இதை சிலர் தங்களது போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.

கையை பிடித்த உடனேயே நயன்தாரா திரும்பி அந்த நபரை கோபமாக முறைத்தார். அதை உணர்ந்து கொண்ட விக்னேஷ் சிவனும் திரும்பி பார்க்க அந்த நபர் உடனே விலகி ஓடிவிட்டார். இதனால் நயன்தாரா மிக அப்செட் ஆகியுள்ளார். இது போல் நயன்தாராவுக்கு நடப்பது முதன்முறை அல்ல. ஏற்கனவே ஒரு முறை காரில் இருந்து இறங்கும் போதும், காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போதும் அவரது கையை பிடித்து ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் இழுத்து இருக்கின்றனர். அப்போதெல்லாம் விக்னேஷ் சிவன் கடுப்பாகி திட்டியிருக்கிறார். இன்றைக்கு நடந்த சம்பவத்தைப் பார்த்து ஒரு பெண் திருமணமான பின்பும் கூட இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்களே என்று அவரது ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

Video Code Embed Credits: Thanthi Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்