நெல்சனை ஓட்டுறது ரொம்ப கஷ்டமா இருக்கு..! தயவுசெஞ்சு ஓட்டாதீங்க..லோகேஷ் காட்டிய பெருந்தன்மை

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சனை வச்சி செய்து வருகின்றனர் இணைய நெட்டிசன்கள். கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் நெல்சன். பின்னர் டாக்டர் என்ற படத்தை எடுத்தார். இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் இளைய தளபதி விஜய் அவர்களை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அரபிக் குத்து, ஜாலியோ ஜும்கானா போன்ற வெளியான அனைத்தும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்தது. ஆனால் படம் வெளியான பின்பு ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்சனை ஓட்டுறது ரொம்ப கஷ்டமா இருக்கு..! தயவுசெஞ்சு ஓட்டாதீங்க..லோகேஷ் காட்டிய பெருந்தன்மை 1

விளம்பரம்

வசூல் ரீதியில் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது பீஸ்ட் திரைப்படம். இதற்கிடையே நெல்சன் தனது அடுத்தபடமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் ஜூன் 3ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே வசூலை குவித்துள்ளது விக்ரம் படம். எல்லா திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இரவு காட்சிகள் கூட நிரம்பிவிட்டன. இதற்கிடையே பீஸ்ட் தோல்வியை வைத்து நெல்சனை பயங்கராமாக கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்.

தொடர்புடையவை  குறும்புத்தனம் பண்றேன்னு, கிறுக்குதனம் பண்ணுது.! அதிதியை கழுவி ஊற்றிய ப்ளூசட்டை

நெல்சனை ஓட்டுறது ரொம்ப கஷ்டமா இருக்கு..! தயவுசெஞ்சு ஓட்டாதீங்க..லோகேஷ் காட்டிய பெருந்தன்மை 3

விளம்பரம்

தற்போது லோகேஷ் கனகராஜ் நெல்சன் பற்றி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் நெல்சனைப் பற்றிய ட்ரோல்ஸ் மீம்ஸ்களைப் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், நெல்சன் தனக்கு நீண்ட நாள் நண்பர் என்றும் அவர் எப்போதும் ஜாலியாக இருக்ககூடிய ஒரு நபர் என்றும் கூறினார். அப்படி ஜாலியாக இருக்கும் நபர் என்பதால் ஓவராக கலாய்க்கிறார்களா என்பது தெரியவில்லை என்று லோகேஷ் கூறிறார். இதற்கு ஒரு லிமிட் இருக்கிறது, ஜாலியாக எடுத்துக் கொள்ளும் அளவிற்க்கும் மீம் போடுகிறார்கள், முகம் சுளிக்கும் அளவிற்கும் மீம் போடுகிறார்கள். தயவு செய்து இதையெல்லாம் ரசிகர்கள் தவிர்த்து விடுங்கள் என்று லோகேஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார். அவரின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Cinema Vikatan

விளம்பரம்

Leave a Comment