முதலமைச்சர் கைகளை பிடித்து கொண்டே நாற்காலியில் சரிந்த பி சுசீலா.! பதறிய முதல்வர் ஸ்டாலின்

பிரபல பின்னணிப் பாடகி பி சுசிலாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக இன்று விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டத்தைப் பெறும் போது எழுந்து நின்ற சுசீலா அவர்கள், நிற்க முடியாமல் தடுமாறி நாற்காலியில் சாய்ந்தார். அவரை கைத்தாங்கலாக பிடித்து முதல்வர் ஸ்டாலின் விருதினை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இசை உலகில் முடி சூடா அரசியாக வலம் வருபவர் பாடகி பி சுசிலா. 1950ல் தனது இசை வாழ்க்கையை தொடங்கிய அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற இந்திய மொழிகள் பலவற்றில் சுமார் 70,000 பாடல்களை பாடியிருக்கிறார். ஐந்து முறை தேசிய விருது, பத்மபூஷன் விருது, மூன்று முறை தமிழக அரசு விருது என்று விருதுகளை வாங்கிக் குவித்த அவர் கின்னஸ் சாதனையாளராகவும் வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கைகளை பிடித்து கொண்டே நாற்காலியில் சரிந்த பி சுசீலா.! பதறிய முதல்வர் ஸ்டாலின் 1

விளம்பரம்

இந்த நிலையில் இன்று டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் கௌரவ டாக்டர் பட்டத்தை பி. சுசிலா அவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது கைகளால் வழங்கினார். பின்னர் பேசிய அவர், “தான் பி சுசிலாவின் ரசிகன், மேடை ஏறியதும் அவரிடம் முதலில் இந்த வார்த்தையைத்தான் கூறினேன். நான் இரவு நேரங்களில் காரில் பயணிக்கும் பொழுது பி சுசிலா அவர்களின் பாடல்களை ஒலிக்க விட்டு சென்று செல்வேன். அவர் பாடியதிலேயே எனக்கு பிடித்த பாட்டு ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை’ என்கிற பாடல் தான். இந்த டாக்டர் பட்டத்தை வழங்குவதால் சுசிலாவுக்கு மட்டுமல்ல, இந்த டாக்டர் பட்டத்திற்கே பெருமை” என்று பேசினார்.

தொடர்புடையவை  பிரம்மாண்டமாக நடந்து வரும் 'அயலான்' இசை வெளியீட்டு விழா.! வந்து குவிந்த பிரபலங்கள்..!

முதலமைச்சர் கைகளை பிடித்து கொண்டே நாற்காலியில் சரிந்த பி சுசீலா.! பதறிய முதல்வர் ஸ்டாலின் 3
பின்னர் சுசீலாவால் நடக்க முடியவில்லை என்பதால் முதலமைச்சர் பி சுசீலா அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகே வந்தார். அப்போது அவருக்கு விருதை பெற்றுக் கொள்வதற்காக பி சுசீலா எழுந்து நிற்க முயன்றார். ஆனால் அவரால் எழுந்து நிற்க முடியாமல் முதல்வர் கைகளைப் பிடித்துக் கொண்டே தடுமாறி நாற்காலியில் சரிந்தார் அவரை கை கொடுத்து தூக்கி விட்ட முதலமைச்சர் பின்பு கௌரவ டாக்டர் பட்டத்தினை வழங்கி கௌரவித்தார். 88 வயதான சுசிலா அவர்கள் இன்றளவும் திரைத்துறையில் ஆக்டிவாக வலம் வருகிறார். ஆனால் வயது மூப்பு காரணமாக அவர் இந்த தடுமாறி இருந்த காணொளியை பார்த்த பலரும் மனம் வருந்தி வருகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Polimer News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment