மோடி அரசு அறிவித்த “பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா” திட்டத்தினால் கர்ப்பிணி பெண்கள் பல சிக்கல்களை சந்திப்பதற்காக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம், ஒரு கர்ப்பிணி பெண்ணின் முதல் குழந்தைக்கு மூன்று தவணைகளில் ரூ.5000 தருகிறது. ஆனால் 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒரு தாயின் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ.6000 வழங்குபடுவதைவிட குறைவாகும்.
இருப்பினும், இந்த குறைந்த அளவு தொகை கூட பெண்களுக்கு முறையாக சென்று சேர்வதில்லை. கடந்த 6 மாதங்களில் முதல் குழந்தையை ஈன்றெடுத்த பெண்களில் வெறும் 39 சதவிகிதபெண்களே முதல் தவணையை பெற்றுள்ளனர் என the scroll நிறுவனம் 6 மாநிலங்களில் நடத்திய ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
மகப்பேறு நலன்களை பெற பயோமெட்ரிக் அடிப்படையிலான அடையாள எண் தேவைப்படுவதே இத்திட்டத்தில் மிக பெரிய தடையாக உள்ளது எனவும் இத்திட்டத்தின் விண்ணப்ப செயல்முறையே பல சிக்கல்களை கொண்டிருக்கும் போது, ஆதாரை கட்டாயமாக திணிக்கும் போது மேலும் சிக்கல்களை உருவாக்குவதாகவும் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஆதார் தொடர்பான சிக்கல்களை சந்திப்பதாகவும், ஆதார் கொடுப்பனவு அமைப்பு மூலம் வங்கிகள் மேற்கொள்ளும் பண பரிமாற்றத்தை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
கர்ப்பிணி பெண்களின் விண்ணப்பங்களை அங்கன்வாடி தொழிலாளர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், மூன்றில் ஒரு பகுதியினர் ஆதார் தொடர்பான பிரச்சனை எனவும், 15 சதவிகிதம் பேர் வங்கி சார்ந்த பிராசனை எனவும் தெரிவித்துள்ளனர்.
கர்பம் தரித்திருக்கும் பெண்கள், தங்களை கவனித்துக் கொள்ளவும், ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில், தேவை இல்லாத அலைச்சலை ஆதார் தொடர்பான பிரச்சனை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் இருக்கிறது.
ஆதார் தொடர்பான சிக்கல்கள்:
கர்ப்பிணி பெண்களுக்கான உதவி தொகை திட்டத்திற்கு, முக்கியமான அடையாள அட்டையாக ஆதார் மட்டுமே கேட்கப்படுகிறது. ஒரு வேலை ஆதார் தொலைந்திருந்தாலோ அல்லது இதுவரை எடுக்கப்படாமல் இருந்தாலோ அல்லது பிழைகள் இருந்தாலோ சிக்கல் பெரிதானது. அதனை சரி செய்ய ரூ.50 முதல் ரூ 200 வரையில் செலவு செய்ய நேரிடும். அது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபர்கள் நேரடியாக வரவேண்டும் என்பது அடிப்படை விதியாக இருக்கும் போது, கர்ப்பிணி பெண்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
ஒரு வேலை, கர்ப்பம் தரித்திருக்கும் பெண் கணவரின் ஆதாரையும் இணைக்கவில்லை என்றால் விண்ணப்பம் ரத்தாகிவிடுகிறது. கணவன் இல்லாத மனைவி, கணவனிடம் ஆதார் இல்லாதது, ஆதாரில் முகவரி மாற்றாதது போன்றவற்றால் இத்திட்டத்தில் பெரும் சிக்கலை பெண்கள் சந்திக்கின்றனர். மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆதாரில் முகவரியை மாற்றுவதற்கு விண்ணப்பித்து இருந்தாலும் அது மாற்றம் முடியாமல் தோல்வியடைந்தது.
ஆதார் மற்றும் பிற தரவுத்தளங்களுக்கிடையேயான புள்ளிவிவர தகவல்களின் முரண்பாடுகள்
ஆதார் மற்றும் இன்னபிற தரவுகளில் உள்ள தகவல்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளால் சிக்கல் பெருமளவு இருக்கிறது. குறிப்பாக பெயரில் உள்ள எழுத்துப்பிழை, பிறந்தநாள் தேதியில் மாற்றம் போன்றவையில் உள்ள குளறுபடிகளை சொல்லலாம். இதனை திருத்திக்கொள்ளவும் அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது.
பிழைகளை மாற்றிக்கொள்ள, ஊராட்சி நிர்வாகத்திடமிருந்து “தடையின்மை சான்று” தேவைப்படுகிறது. அவ்வாறு பெற்று திருத்தி மீண்டும் விண்ணப்பித்து விட்டு காத்திருந்தால், புதிய ஆதார் அட்டை வேறுஒரு பிழையோடு அவர்கள் கைகளுக்கு கிடைக்கிறது.
ஆதாரில் இவ்வாறு சிக்கல்கள் இருக்கின்ற போது, கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மத்திய அரசு சுற்றறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில், பெயரை மாற்றிக்கொள்ள இரண்டு முறையும், பிறந்த தேதி மற்றும் பாலினத்தை மாற்றிக்கொள்ள இரண்டு முறையும் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறியுள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வங்கி கணக்கோடு ஆதாரை இணைப்பது தொடர்பான சிக்கல்:
ஆதாரை வங்கிகளோடு இணைக்காமல் இருப்பதால் பல சிக்கல்கள் நேரிடுகிறது. அதே போல சில பெண்களின் ஆதார் வேறுஒரு வாங்கி கணக்கோடு இணைக்கப்பட்டு இருக்கிறது. அதே போல இதில் சில குளறுபடிகளும் இருக்கின்றன. ஆன்லைனில் பணம் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் வங்கி கணக்கிற்கு பணம் சென்றடையாமல் இருக்கிறது.
இது போன்ற ஆதார் குளறுபடிகள் இருக்கின்ற வேளையில், ஆதாரிலுள்ள பிழைகளை திருத்த சுகாதார அலுவலக உறுப்பினர்களோ அல்லது அங்கன்வாடி உறுப்பினர்களோ லஞ்சம் கேட்பதாக சில பெண்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இது போன்ற முறைகளால் கிராமப்புறத்தில் உள்ள பெண்கள் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறார்கள்.