கால பருவநிலை மாற்றத்தால், இந்தியாவின் பொருளாதாரம் மோசமடையும்!

இன்றைய காலத்தில் உலகத்தை அச்சுறுத்த வந்திருக்கிறது கால பருவநிலை மாற்றங்கள். நாம் சுவாசித்து வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைட் காற்றின் சமநிலை தவறும் போதும், வாயு காற்றுகளின் சதவிகிதம் அதிகரிக்கும் போதும் உலகம் வெப்பமைடையும். இதன் மூலம் கால பருவநிலை மாற்றங்கள் ஏற்படும்.

சமீபத்தில், அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டு தீ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் இதனால் கார்பன் டை ஆக்சைட் காற்றின் சமநிலை தவறிவிடும் என்பதே!

விளம்பரம்
கால பருவநிலை மாற்றத்தால், இந்தியாவின் பொருளாதாரம் மோசமடையும்! 1
காட்டு தீ

கடந்த 2019 ஜூலை மாதம் இந்தியாவில் அதிகபடியான வெப்பம் பதிவாகிய இருக்கிறது. அதேபோல, கோடை காலத்தில் 74 சதவிகித மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டில் 113 சதவிகிதம் கூடுதலாக காட்டு தீ ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை 7 புயல்களால் இந்தியா முழுக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை எல்லாம் கால பருவநிலை மாற்றங்களின் விளைவு தான்.

கால பருவநிலை மாற்றத்தால், இந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட 118 நாடுகளில் இந்தியாவிற்கு 5வது இடம் பிடித்துள்ளது. 2020ஆம் ஆண்டிற்கான உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு வெளியிடப்பட்டது. அதில் 2017ஆம் ஆண்டு 14வது இடத்தில் இருந்த இந்தியா 2018ஆம் ஆண்டு 5 இடத்திற்கு சறுக்கி இருக்கிறது.

விளம்பரம்

வேகமெடுத்துவரும் கால பருவநிலை மாற்றங்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 லட்ச கோடியோ அல்லது 0.3 சதவிகித இழப்போ ஏற்படலாம் என ஜெர்மன்வாட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கால பருவநிலை மாற்றத்தால், இந்தியாவின் பொருளாதாரம் மோசமடையும்! 3
வெளியேற்றப்படும் பசுமை வாயு

மேலும் இத்தகைய இழப்பு, மற்ற உலக நாடுகளை விட இரண்டாவது பெரிய இழப்பு இந்தியாவிற்கு தான் ஏற்படும் என்கிறார்கள். இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சூரத், சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற பகுதிகள் 2050க்குள் தொடர்ச்சியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும். அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளில் பசுமை வாயுகளின் எண்ணிக்கை 1.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என அறிக்கைகள் கூறுகின்றன.

தொடர்புடையவை  மதங்களை கடந்து கொண்டாடுவோம் பொங்கலை!

2016 பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து நாடுகளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றினாலும், இந்த நூற்றாண்டில் வெப்பநிலை 3-3.2 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment