விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.அதில் தற்போது வேதாச்சலத்திற்கு நெஞ்சுவலி வந்து அவர் மயங்கி கீழே விழுகிறார். பின்னர் அவரை எழுப்பி அமர வைத்திருக்கின்றனர். அவர் சூர்யாவிடம் ஒரு சத்தியம் வாங்கி இருக்கிறார். அதில், “மஹாவுடன் நீ சேர்ந்து வாழ்வதுதான் என்னுடைய வாழ்நாளில் கடைசி ஆசை, மஹாவுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லி சத்தியம் செய்து கொடு” என்று அவர் கூறுகிறார். இதனால் சூர்யாவும் தனது தாத்தா வேதாச்சலத்திற்கு சத்தியம் செய்து கொடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஆஹா கல்யாணம்’ தொடரில் சூர்யாவிற்கும், மஹாவிற்கும் திருமணம் ஆனது முதலே சரியான உறவு இல்லை. சூர்யாவின் தாயார் ராஜலட்சுமி சூர்யா மஹா இணைந்து வாழ்வதை விரும்பவில்லை. சூர்யாவும் தனது தாயார் பேச்சை கேட்டுக் கொண்டு மஹாவுடன் இணைந்து வாழாமலே இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், வீட்டில் பொங்கல் விழா நடக்கிறது. அப்போது தன்னை ஆசீர்வதிக்கும்படி மஹா சூர்யா காலில் விழ, சூர்யா அதை ஏற்க மறுக்கிறார். இதையெல்லாம் பார்த்து மனமுடைந்து போன சூர்யாவின் தாத்தா வேதாச்சலத்திற்கு நெஞ்சு வலி வருகிறது.
அதன் பின்னர் வேதாச்சலம் தனது பேரன் சூர்யாவிடம் ஒரு சத்தியம் ஒன்றை வாங்குகிறார். “தன்னுடைய வாழ்நாளில் கடைசி ஆசையே நீயும் மஹாவும் இணைந்து வாழ வேண்டும் என்பதுதான்” எனச் சொல்லி சத்தியம் வாங்கிக் கொள்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television