நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் கவின்.! வெளியான திருமண ஆல்பம்.!

சின்னத்திரை நடிகர் கவினுக்கும் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவருக்கும் திருமணம் முடிந்திருக்கிறது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் கவின் மற்றும் மோனிகா தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் கவின்.! வெளியான திருமண ஆல்பம்.! 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்கிற சீரியலின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் கவின். அதன் பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நாடகம் என்று சொன்னால் அது சரவணன் மீனாட்சி தான். இந்த சீரியலில் இவர் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். கவினுக்கு இதன் மூலமாக பல ரசிகர்கள் உருவானார்கள்.

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் கவின்.! வெளியான திருமண ஆல்பம்.! 3

விளம்பரம்

அதன் பின்னர் வாய்ப்புகள் குறைந்த கவினுக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 3 இன் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு இவருக்கும் சக போட்டியாளராக இருந்த லாஸ்லியாவுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. வெளியே வந்த பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் கவின்.! வெளியான திருமண ஆல்பம்.! 5

விளம்பரம்

தற்போது கவின் லிஃப்ட் மற்றும் டாடா என்கிற இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. கவின் தற்போது தமிழின் வளர்ந்து வரும் நடிகராக உயர்ந்திருக்கிறார்.

தொடர்புடையவை  சிவகார்த்திகேயன் மகனின் 2வது பிறந்தநாள்.! அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்திய சிவா.!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் கவின்.! வெளியான திருமண ஆல்பம்.! 7

விளம்பரம்

தொடர்ந்து கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கவினுக்கும் அவரது காதலி மோனிகாவிற்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இன்று அவர்களது திருமணம் நடைபெற்று இருக்கிறது.

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் கவின்.! வெளியான திருமண ஆல்பம்.! 9

விளம்பரம்

சென்னையில் உள்ள ஒரு விடுதியில் தண்ணீர் நிறைந்த ஒரு குளத்திற்கு மத்தியில் இருந்த மண்டபத்தில் வைத்து தனது காதலியை கரம் பிடித்திருக்கிறார் கவின்.

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் கவின்.! வெளியான திருமண ஆல்பம்.! 11

விளம்பரம்

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பலரும் கவின் மற்றும் மோனிகா தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment