குடித்துவிட்டு செம்ம ரகளை செய்யும் கெளதம்.! வீட்டில் அனைவரிடமும் போட்டோவை காட்டி அலப்பறை.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது கௌதம் வீட்டில் உள்ள அனைவரிடமும் குடித்துவிட்டு கலாட்டா செய்கிறார். மேலும் ஐஸ்வர்யா மாடலாக இருந்தபோது மதனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனைவரிடமும் காட்டுகிறார். அந்த சமயம் பார்த்து மகாவும் ஐஸ்வர்யாவும் உள்ளே நுழைகின்றனர். ஆனால் கௌதம் குடித்துவிட்டு மிகப்பெரிய ரகளை செய்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடித்துவிட்டு செம்ம ரகளை செய்யும் கெளதம்.! வீட்டில் அனைவரிடமும் போட்டோவை காட்டி அலப்பறை.! 1

விளம்பரம்

ஐஸ்வர்யாவை எப்படியாவது வீட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்று கௌதமமும் அவரது தாயார் சித்ராவும் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில் மதனுடன் ஐஸ்வர்யா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி அவரை வீட்டிலிருந்து வெளியேற்ற திட்டம் தீட்டு வருகின்றனர். ஆனால் மதனை பிடித்து உண்மைகளை வாங்கி ஐஸ்வர்யாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மகா போராடிக் கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, கௌதம் குடித்துவிட்டு நடுவீட்டில் அமர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் பாட்டியும் தாத்தாவும் அவரை திட்டித் தீர்க்கின்றனர்.

தொடர்புடையவை  ஆர்த்தியை ஏமாற்றிவிட்டு கயல் கழுத்தில் தாலி கட்டிய எழில்.! இந்த ட்விஸ்டை எதிர்ப்பார்க்கவே இல்லையே.!

குடித்துவிட்டு செம்ம ரகளை செய்யும் கெளதம்.! வீட்டில் அனைவரிடமும் போட்டோவை காட்டி அலப்பறை.! 3

விளம்பரம்

அந்த சமயம் ஐஸ்வர்யா மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீட்டில் உள்ள அனைவரிடமும் வீசி எரிந்து ஐஸ்வர்யாவை இப்போதே வீட்டிலிருந்து வெளியே அனுப்ப வேண்டும் என கூறிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் ஐஸ்வர்யாவும் மஹாவும் உள்ளே வருகின்றனர். எனவே மதனை கையும் களவுமாக பிடித்து வந்து கௌதம் முகத்தில் கரியை பூசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment