பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைரல் ஆனவர்கள் தான் அஜித் மற்றும் கேபி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளனர். விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் கேப்ரியல்லா. இவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே 7-C என்ற குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நாடகத்தில் கேபி கதாபாத்திரத்திலேயே நடித்தார். பின்னர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருப்பார் கேபி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவரைப் போலவே சிறு குழந்தையாக இருக்கும்போதே சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக இருந்தவர் ஆஜித். ஒரு சில படங்களிலும், ஒன்று இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். பின்னர் இவருக்கு படங்களில் வாய்ப்புகள் குறையவே ஆல்பம் பாடல்களை தயாரித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்தார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். பிக்பாஸ் உள்ளே இருக்கும்போதே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் வெளியே வந்த இவர்கள் நட்பாக பழகி வந்தனர். அவ்வப்போது இருவரும் இணைந்து நடனமாடி அதை வீடியோக்களாக வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை அளித்த ஆஜித், இடம் கேபியை காதலிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அப்போது அவர் இல்லை அவர் எனக்கு மிகுந்த நண்பர், எனக்கு சகோதரி போன்றவர் என்று பதில் அளித்து இருந்தார். இருந்தபோதிலும் ஆஜித்தையும் கேபியையும் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தொடர்ந்து நெட்டிசன்கள் பேசி வந்தனர். தற்போது இருவரும் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Tamil News Live 24×7