வீடு ரெடி.! வேட்டைக்கு நீங்க ரெடியா? பிக்பாஸ் சீசன் 6ன் முதல் ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி

பிக்பாஸ் சீசன் 6 நாளை மிகப்பிரமாண்டமாக துவங்க உள்ள நிலையில் தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது பிக்பாஸ் டீம். அதில் கமலே வீட்டிற்குள் நுழைந்து விளக்குகளை ஆன் செய்து வீடு ரெடி வேட்டைக்கு நீங்க ரெடியா என்று கேள்வி எழுப்புவது போன்ற ப்ரோமோவை வெளியிட்டு உள்ளது விஜய் டிவி. தமிழின் ரியாலிட்டி ஷோவில் முதலிடம் வகிப்பது பிக்பாஸ். இது 5 சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இந்த முறையும் பிக்பாஸை கமலஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 4 மற்றும் 5 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே சீசன் 6ஐ மிகப்பெரிய வெற்றியடைய செய்து விட வேண்டும் என்று கணக்குப் போட்டு காய்களை நகர்த்தி வருகிறது பிக்பாஸ் டீம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வீடு ரெடி.! வேட்டைக்கு நீங்க ரெடியா? பிக்பாஸ் சீசன் 6ன் முதல் ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி 1

விளம்பரம்

அதற்கேற்ப சர்ச்சையான போட்டியாளர்களை உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் ரக்ஷன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, விஜே மகேஸ்வரி, வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர், மைனா நந்தினி, விஜே அர்ச்சனா, ரட்சிதா மஹாலெட்சுமி, சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, ஜிபி முத்து, காமெடி நடிகர் மதுரை முத்து போன்றவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே இருக்கிறது. விரைவில் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

தொடர்புடையவை  மனோஜை அசிங்கப்படுத்துவதை தாங்க முடியாமல் பணத்தை திருப்பி கொடுத்த ரோகினி..! அதிர்ச்சியாகிய விஜயா மற்றும் மனோஜ்..!

வீடு ரெடி.! வேட்டைக்கு நீங்க ரெடியா? பிக்பாஸ் சீசன் 6ன் முதல் ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி 3

விளம்பரம்

இந்த நிலையில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பதை சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் பிக்பாஸ் செட்டிற்குள் நுழைந்து அங்கு புகைப்படங்களை எடுத்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை விஜய் டிவியின் youtube பக்கங்களில் ஒன்றில் பதிவிட்டு இருந்தார். கமலே வீட்டிற்குள் நுழைந்து விளக்குகளை ஆன் செய்து வீடு ரெடி வேட்டைக்கு நீங்க ரெடியா என்று கேள்வி எழுப்புவது போன்ற ப்ரோமோவை வெளியிட்டு உள்ளது விஜய் டிவி. அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment