சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலில் ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் நடப்பது போலவும், ஆதிரை கழுத்தில் அருண் தாலி கட்டுவது போன்றும் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் முடிந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சன் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியலில் சில நாட்களுக்கு முன்பு 11.16 டிஆர்பி ரேட்டிங் பெற்று எந்த சின்னத்திரையும் செய்யாத அளவிற்கு சாதனை படைத்திருந்தது.அதற்கு முக்கிய காரணம் ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் நடைபெறுமா? என்பதுதான். கடைசியில் ஆதிரையை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்து இயக்குனர் அதிர்ச்சி கொடுத்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதிரையும் அருணும் காதலித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரிகாலனை ஆதிரைக்கு திருமணம் செய்து வைக்கிறார் குணசேகரன். ஆனால் இந்த விருப்பத்தில் ஆதிரைக்கு துளியும் விருப்பமில்லை. கரிகாலனை தனது கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி ஆதிரை அவனுடன் சேர்ந்து வாழாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆதிரையின் காதலர் அருணுக்கு விபத்து ஏற்பட்டு அவர் நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி போயிருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்த நிலையில் தற்போது ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யா புது வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் ஆதிரைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த அதே கோவிலில் வைத்து அருண் அவர் கழுத்தில் தாலி கட்டுவது போன்று வெளியாகியிருந்தது.
இதைப் பார்த்த பலரும் கரிகாலனை கழட்டிவிட்டு அருணை திருமணம் செய்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அந்த வீடியோவில் அவர் நான் கேட்டது அருணுடன் திருமணம், ஆனால் தனக்கு கிடைத்தது கரிகாலன் உடனான திருமணம் என்று பகிர்ந்து இருக்கிறார். ஆதிரைக்கு அருணுடன் ரகசிய திருமண ஏற்பாடுகள் நடந்த அதே கோவிலில் வைத்து அருணுக்கும் இவருக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவை தான் அவர் பகிர்ந்து இருக்கிறார். இது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.0