வேறு ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வந்த பார்த்திபன்.! விழுந்து விழுந்து சிரித்த காவ்யா.!

ஈரமான ரோஜாவே சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காவியா கோவில் குளத்தில் விழுந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அங்கு ஓடிச்சென்று பார்த்திபன் அவரை தூக்குகிறார். ஆனால் அதன் பின்னர் அங்கு ட்விஸ்ட் நடக்கிறது. அந்த காமெடியான ப்ரோமோவை சீரியல் குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான சீரியலில் ஜீவா பிரியா, பார்த்தி காவியா ஆகிய ஜோடிகள் இருக்கின்றனர். இதில் பார்த்தியும் ஜீவாவும் அண்ணன் தம்பியாகவும், பிரியாவும் காவியாவும் அக்கா தங்கைகளாக இருக்கின்றனர். இந்த இரண்டு ஜோடிகளுக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேறு ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வந்த பார்த்திபன்.! விழுந்து விழுந்து சிரித்த காவ்யா.! 1

விளம்பரம்

 

அனைத்து பிரச்சனைகளையும் கடந்து இந்த இரண்டு ஜோடிகளும் மீண்டும் ஒன்றாக இணைவார்களா என்கிற சஸ்பென்ஸுடன் கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கோவிலில் அனைவரும் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது பார்த்தியின் தாயார் காவியாவிற்கு தலையில் வைத்துக்கொள்ள பூவை கொண்டு கொடுக்குமாறு சொல்லி கொடுக்கிறார். மறுபுறம் காவியாவின் மாமா குளக்கரை அருகே நின்று கொண்டிருக்கிறார். அப்போது குளத்தில் காவியா தவறி விழுந்து விட்டதாக பார்த்தியை அழைத்து வந்து காப்பாற்றுமாறு கூறுகிறார். பார்த்தியும் குளத்தில் குதித்து காப்பாற்றுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கதிர் இந்த வீட்டுக்கு பொணமா தான் வருவான்.! குணசேகரன் சொன்னதை கேட்டு கொதித்த நந்தினி.!

வேறு ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வந்த பார்த்திபன்.! விழுந்து விழுந்து சிரித்த காவ்யா.! 3

ஆனால் வெளியில் வந்து பார்த்தபோது தான் தெரிகிறது அது காவியாவே கிடையாது. வேறு யாரோ ஒருவரை தூக்கிக்கொண்டு வந்துள்ளார் பார்த்தி. அதை பார்த்து காவியா விழுந்து விழுந்து சிரிக்கிறார். இந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment