ஜெயிலர் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஜெயிலர் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை பயன்படுத்தியதால் அந்தப் பகுதியை திரைப்படத்தில் இருந்தும், ஓடிடி தளங்கள் உட்பட அனைத்திலிருந்தும் நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், யோகி பாபு, தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி போன்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளத்துடன் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ஏழே நாட்களில் 375 கோடி வசூலை வாரி குவித்து சாதனை படைத்திருந்தது.

ஜெயிலர் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.! 1

விளம்பரம்

விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் மொத்த வசூலே 500 கோடி என்று இருந்த நிலையில் ஒரே வாரத்தில் சுமார் 375 கோடி வசூலை வாரி குவித்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. தற்போது வரை இந்த வசூல் 600 கோடியாக மாறி இருக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்திலிருந்து முக்கிய காட்சி ஒன்றை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதாவது பெங்களூர் ஐபிஎல் அணியின் ராயல் சேலஞ்சர்ஸ் ஜெர்ஸியை அவர்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தொடர்புடையவை  தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகி திடீர் மரணம்.! வீட்டில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு.!

ஜெயிலர் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.! 3

விளம்பரம்

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிந்திருந்த ஒருவர் பெண்களுக்கு எதிரான அவதூறு பரப்பக்கூடிய வகையில் சில கருத்துக்களை பேசியதாகவும், அதனால் இது தங்கள் அணியின் இமேஜை கெடுக்கும் என்ற சார்பில் இந்த அணியின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த காட்சியை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நீக்கிவிட்டு திரையிடுமாறு ஜெயிலர் படக் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் தொலைக்காட்சியிலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் பொழுதும் இதே நடைமுறையை பின்பற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment