தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகி திடீர் மரணம்.! வீட்டில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு.!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வீட்டில் தவறி விழுந்து தற்போது உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தமிழக மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணி ஜெயராம் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவரது இயற்பெயர் கலைவாணி இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு ஆரம்பித்தது. குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவர் “ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்படுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகி திடீர் மரணம்.! வீட்டில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு.! 1

விளம்பரம்

வாணிஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு “தீர்க்கசுமங்கலி” ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை எம்.எஸ் விசுவநாதன் இசையில் பாடினார். அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில்போன்ற கடினமான பாடல்களை தமிழ்த் திரையுலகில் பாடியுள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

தொடர்புடையவை  Avengers Dooms Day படத்தில் நடிக்க இருக்கும் தனுஷ்..! வெளியான மிகப்பெரிய தகவல்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகி திடீர் மரணம்.! வீட்டில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு.! 3

விளம்பரம்

வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று நுங்கம்பாக்கத்தில் அவரது வீட்டில் இருந்து வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடிபட்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து நுங்கம்ப்பக்கம் போலீஸார் அவரது வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட இருக்கிறது. சமீபத்தில் தான் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment