யோகி பாபுவின் பொம்மை நாயகி திரைப்படம் எப்படி இருக்கு? முழு திரை விமர்சனம் இதோ.!

இன்று தமிழகமெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் பொம்மை நாயகி திரைப்படம் எப்படி இருக்கிறது என்கிற படத்தின் திரை விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம். நடிகர் யோகி பாபு நடிப்பில் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் பொம்மை நாயகி. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ஷான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். தனது 9 வயது குழந்தைக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக போராடும் ஒரு தந்தையாக இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் யோகி பாபு. தற்போது இந்த படம் குறித்த முழு விமர்சனத்தை பார்க்கலாம். கடலூர் மாவட்டத்தில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார் யோகி பாபு. அவருடைய மகள் தான் 9 வயதாகும் பொம்மை நாயகி. தனது மனைவி மற்றும் மகளுடன் ஏழைக் கூலித் தொழிலாளியாக குடும்பத்தை நடத்தி வருகிறார் யோகி பாபு. அதே பகுதியில் யோகி பாபுவின் அண்ணன் அருள்தாஸ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

யோகி பாபுவின் பொம்மை நாயகி திரைப்படம் எப்படி இருக்கு? முழு திரை விமர்சனம் இதோ.! 1
யோகி பாபுவின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவராகவும், இரண்டாவது மனைவி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் ஆகவும் இருக்கிறார்கள். இதில் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் தான் யோகி பாபு. இவர் முதல் மனைவிக்கு பிறந்த அருள்தாஸ் என்பவருடன் சற்று விலகியே இருக்கிறார். டீக்கடையில் வேலை பார்த்து வரும் யோகி பாபு அவருடைய முதலாளிக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலையில்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் அவரது ஊரில் திருவிழா ஒன்று நடக்கிறது. அப்போது இரவு நேரத்தில் மகள் பொம்மை நாயகியை காணாமல் தேடி அலைகிறார். அந்த சமயத்தில் அவரிடம் இருவர் தவறான முறையில் நடந்து கொள்வதை பார்த்து அதிர்ச்சி அடையும் யோகி பாபு உடனடியாக அவர்களை அடித்து துரத்தி வருகிறார். மேலும் இது குறித்து போலீசில் புகார் செய்வதற்காக காவல் நிலையம் செல்கிறார் யோகி பாபு. ஆனால் அவர்கள் இருவரும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புகாரை வாங்க போலீசார் மறுக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஒரு கையில் சிகரெட்..ஒரு கையில் LGBTQ கொடி..யார் இந்த லீனா மணிமேகலை? தொடரும் எதிர்ப்புகள்

யோகி பாபுவின் பொம்மை நாயகி திரைப்படம் எப்படி இருக்கு? முழு திரை விமர்சனம் இதோ.! 3
இதனால் விரத்தி அடைந்த யோகி பாபு நீதிமன்றத்தை நாடுகிறார். அங்கு அவர்களுக்கு தண்டனையும் கிடைக்கிறது. பின்னர் மேல்முறையீடு செய்து வெளியே வரும் அவர்கள் யோகி பாபுவை பழிவாங்க நினைக்கிறார்கள். அவர்கள் யோகிபாபுவை எவ்வாறு பழி வாங்கினார்கள்.? யோகி பாபுவிற்கு என்ன நடந்தது? பொம்மை நாயகிக்கு என்ன நடந்தது? அவர்கள் அந்த பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள்? என்பதே படத்தின் மீதிக் கதை. இந்த படத்தில் வழக்கம் போல எதார்த்தமான தனது நடிப்பால் நம் மனதில் இடம் பிடிக்கிறார் யோகி பாபு. மகளுக்கு்நடக்கும் அநீதிக்கு கண்டு பொங்கி எழுந்த யோகி பாபு ஆதிக்க சமூகத்திற்கு எதிராக அலையும் காட்சிகள் நம்மை நெகிழ வைக்கின்றது. அவரது மனைவியாக நடித்த சுபத்ரா யோகி பாபுவுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொம்மை நாயகியாக நடித்த குழந்தை ஸ்ரீமதி, யோகி பாபுவின் அண்ணனாக வரும் அருள்தாஸ் ஆகியோரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது சமூகத்தில் நடக்கும் அவலங்களை கொண்டு பொம்மை நாயகி படம் எடுக்கப்பட்டுள்ளது சிறந்த தேர்வாக இருக்கிறது.

தொடர்புடையவை  GOAT படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு..! முதல் காட்சி எப்போ தெரியுமா?.. வெளியான அதிரடி தகவல் ..!

யோகி பாபுவின் பொம்மை நாயகி திரைப்படம் எப்படி இருக்கு? முழு திரை விமர்சனம் இதோ.! 5
இரண்டு மனைவிகளுக்கு பிறந்த அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் சாதி ஒருவரை எப்படி மாற்றுகிறது என்பதை நெற்றி பொட்டில் அடித்தார் போல் விளக்கி இருக்கிறது பொம்மை நாயகி படம். இந்த படம் மகளுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை விளக்குகிறது. இது போல் பல கதை அம்சங்கள் கொண்டு படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தில் எந்தவிதமான மாறுதலும் இல்லாமல் ஒரே கதையை பிரதிபலித்ததால் சற்று சுணக்கம் ஏற்படுத்தி இருக்கிறது. முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் பெரிதாக இல்லை. படம் முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே படம் கிளைமாக்ஸ் வந்துவிட்டது. ஆனாலும் படம் அரைமணி நேரம் தேவையில்லாமல் செல்வது போன்று உணர்வு ஏற்பட்டது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் அந்த அளவிற்கு கவரவில்லை. பின்னணி இசை உணர்வுபூர்வமாக இருந்தது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகியவையும் சிறப்பாக இருந்தது. வசனங்கள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாகவும் சமூகத்திற்கு ஒரு கருத்தை ஆணித்தரமாக சொல்லும் விதத்திலும் அமைந்திருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  டீசர் விழாவுக்கு வராத பட்டத்து இளவரசர்! விக்ரமுக்காக வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த பொன்னியின் செல்வன் டீம்

யோகி பாபுவின் பொம்மை நாயகி திரைப்படம் எப்படி இருக்கு? முழு திரை விமர்சனம் இதோ.! 7

படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள்:

விளம்பரம்
  • யோகி பாபு, பொம்மை நாயகியாக நடித்த ஸ்ரீமதி, யோகி பாபுவின் மனைவியாக நடித்த சுபத்ரா ஆகியோரின் நடிப்பு.
  • டீக்கடையில் வரும் கதாபாத்திரங்கள், ஆதிக்க சாதியினராக நடித்த கிராமத்து மக்கள், கோர்ட்டில் வழக்கறிஞர்களாக வருபவர்கள், போலீசார் என அனைவரும் தங்களது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
  • குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்த கதைக்களம்.

யோகி பாபுவின் பொம்மை நாயகி திரைப்படம் எப்படி இருக்கு? முழு திரை விமர்சனம் இதோ.! 9
படத்தின் நெகட்டிவ் விஷயங்கள்:

  • படத்தின் இரண்டாம் பாதி.
  • தேவையில்லாமல் இழுத்துக் கொண்டே சென்ற கடைசி அரை மணி நேரம். பொம்மை நாயகி திரைப்படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.25/5

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment