Categories: அரசியல்

அன்பழகனின் 98-வது பிறந்தநாள்! எம்.பி. கனிமொழி வாழ்த்து!!

வெளியிட்டது
அன்பழகனின் 98-வது பிறந்தநாள்! எம்.பி. கனிமொழி வாழ்த்து!! 1
The Chief Minister of Tamil Nadu, Shri M. Karunanidhi, called on the Prime Minister, Dr. Manmohan Singh, in New Delhi on July 25, 2007. The Union Minister for Shipping, Road Transport and Highways, Shri T. R. Baalu is also seen.

திமுக கட்சியின் பொது செயலாளர் க அன்பழகனின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியில் உள்ள நிர்வாகிகள், பணியாளர்கள், என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் மக்களவை உறுப்பினரான கனிமொழி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அவர் அன்பழகனின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில் , திராவிட இயக்கத்தில் முதுபெரும் தலைவரும், நம் வழிகாட்டியாக உள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு 98-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும், தலைவர் கலைஞர் அவர்களின் உயிர் தோழனாக, சமூக நீதி, சம உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளுக்கு ஊறு வந்த தருணங்களில் அரணாய் நின்று காத்திட்ட பேராசான் திராவிட கொள்கைகளின் பல்கலைகழகமாம் பேராசிரியர் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி செய்திட வாழ்த்தி வணங்குகிறேன் என்றார்.

இது போன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.திமுக பொதுச் செயலாளர் பேராசிரியரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உடல்நிலை கருத்தி கொண்டு நேரில் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்