
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நோக்கில் தேசிய கவுன்சிலின் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த கவுன்சில் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் கான்பூர் நகரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் முடிந்து கங்கை நதியில் படகுப் பயணம் செய்தார்.
படகு பயணம் முடிந்த பிறகு திரும்பிய மோடி படி ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து உதவி செய்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகளை விட உயரமாக இருந்து உள்ளது இதனால் அவர் தடுக்கி விழுந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தப் படிகட்டுகளை இடித்துவிட்டுக் சீரமைக்க உத்திரபிரதேச அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அம்மண்டல கமிஷனர் பாப்டே கூறுகையில் “ பிரதமர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும். உயரம் சற்று உயரமாக இருக்கும். இதற்கு முன்னர் வேறு சிலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது “ என்றார்.