Categories: சினிமா

ஹீரோ போல வளர்ந்து நிற்கும் அப்பாஸ் மகன்.! குஷ்பூ வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். தற்போது அவரது மகன் வளர்ந்து ஹீரோ போல மாறியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகை குஷ்பூ அப்பாஸின் மகனை சென்று சந்தித்து அந்த புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ஹீரோ போல வளர்ந்து நிற்கும் அப்பாஸ் மகன்.! குஷ்பூ வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.! 1
1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்கிற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் கால் பதித்தார். பின்னர் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தர்ம யுத்தம் என்கிற சீரியலிலும், ஜெயா டிவியில் ஒளிபரப்பான வைதேகி என்கிற சீரியலிலும் நடித்திருக்கிறார்.


2015 ஆம் ஆண்டு இராமானுஜன் என்கிற படத்தில் கடைசியாக நடித்த அவர் தற்போது படங்களில் இருந்து நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகி வெளிநாட்டில் தனது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். ஏழு ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சில காலமாக விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அதுவும் ஹார்பிக் போன்ற விளம்பர படங்களில் இவர் நடித்தது சர்ச்சையானது. ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்துவிட்டு இப்படிப்பட்ட விளம்பரங்களில் நடிக்கிறார் என்று பலரும் அப்பாஸ் மீது விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது அப்பாஸின் மகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இவரது மனைவி எராம் அலிக்கும் இவருக்கும் 2001 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு எமிரா மற்றும் அய்மான் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அப்பாஸின் மகன் 22 வயதை கடந்து தற்போது அப்படியே அப்பாஸ் போலவே இருக்கிறார்.


அவருடன் குஷ்பூ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பலரும் தமிழ் திரையுலகுக்கு அடுத்த ஹீரோ ரெடி என்று தற்போது கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்