ஈஸியா வாய்ப்பு கிடைக்குது.! அதிதியை தாக்கினாரா ஆத்மிகா.? அவர் போட்ட பதிவை பாருங்க

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாரிசுகளின் படையெடுப்பு நடந்து வருகிறது. இயக்குனர்கள் மற்றும் முண்ணனி நடிகர்களின் பிள்ளைகள் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் வாரிசு நடிகை அதிதி பற்றி மீசைய முறுக்கு பட ஆத்மிகா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் இயக்குனர் சங்கர். இவரின் இளைய மகள் தான் அதிதி. மருத்துவம் படித்து இருந்த போதிலும் திரைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், விருமன் படத்தில் கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தில் மதுரைக்கார பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதிதி. மேலும் இந்த படத்தின் பாடல்களில் இவர் தாவணி சேலையில் போடும் ஆட்டத்தை பார்த்து பலரும் அதிதியின் விசிறிகள் ஆகிவிட்டனர். இந்த நிலையில் மீசையை முறுக்கு படத்தின் நடிகை ஆத்மிகா போட்ட பதிவு ஒன்று சர்ச்சையாகி உள்ளது. அதில் அவர் இயக்குனர் ஷங்கரின் மகளை தாக்குவது போல பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

தொடர்புடையவை  குண்டா இருந்தப்பவும் கலாய்ச்சாங்க..இப்போ ஒல்லியான அப்புறமும் கலாய்குறாங்க !!முதல் முறை பேட்டி அளித்துள்ள குஷ்பூவின் மகள் அனந்திதா சுந்தர்!!

ஈஸியா வாய்ப்பு கிடைக்குது.! அதிதியை தாக்கினாரா ஆத்மிகா.? அவர் போட்ட பதிவை பாருங்க 1

விளம்பரம்

ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்தவர் நடிகை ஆத்மிகா. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் மீசைய முறுக்கு படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்த அவர், மிகப்பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காட்டேரி, கண்ணை நம்பாதே, நரகாசூரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது கிளாமர் புகைப்படங்களை பார்ப்பதற்கே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று கூறலாம். இந்த நிலையில் அவர் போட்ட பதிவு ஒன்று சர்ச்சையாகி உள்ளது. அதில் அவர் இயக்குனர் ஷங்கரின் மகளை தாக்குவது போல பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

ஈஸியா வாய்ப்பு கிடைக்குது.! அதிதியை தாக்கினாரா ஆத்மிகா.? அவர் போட்ட பதிவை பாருங்க 3

விளம்பரம்

அவர் ட்விட்டர் பக்கத்தில் மற்றவர்கள் ஏணி வழியாக எளிதாக ஏறிப் போகும் பாக்கியத்தை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது பார்த்துக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். சினிமாவில் பலரும் வாய்ப்புக்காக போராடி வரும் நிலையில், இயக்குனர் ஷங்கரின் மகள் வந்த உடனேயே அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி உள்ளார். இதை குறிக்கும் விதமாகத்தான் ஆத்மிகா இவ்வாறு பதிவிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிதி விருமன் படத்தில் கார்த்திக் உடன் நடித்தார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் ஆடியோ வெளியீடு நடந்தது. படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று துவங்கிய நிலையில் ஆத்மிகா இவ்வாறு குறிப்பிட்டு இருப்பது தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையவை  கேப்டனை பின்பற்றி 50 பேருக்கு தினமும் உணவு வழங்கப் போகும் புகழ்.! இன்றே தொடங்கப்பட்ட நற்செயல்.!

ஈஸியா வாய்ப்பு கிடைக்குது.! அதிதியை தாக்கினாரா ஆத்மிகா.? அவர் போட்ட பதிவை பாருங்க 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment