பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமான நடிகர் அபிநயின் மனைவியை தற்போது போலீஸ் தேடி வருகின்றனர். அவர் பண மோசடி வழக்கில் தலைமுறைவாக இருப்பதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தவர் ஜெமினி கணேசன். இவரது பேரன் அபிநய் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொண்டு பிரபலமானவர். பிக் பாஸ் சீசன் போட்டியாளர்களில் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வந்தார் அபிநய். மக்கள் இவருக்கு குறைவான வாக்குகள் அளித்த போதிலும் ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்பட்டு கொண்டே வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸில் இருந்தபோது இவருக்கும் பாவனிக்கும் காதல் ஏற்பட்டதாக வதந்திகள் கிளம்பியது. மேலும் இவரது மனைவி அபர்ணா இவரை பிரிய இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது் ஆனால் அந்த சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தற்போது தனது மனைவியுடன் வாழ்ந்து வரும் அபிநய்க்கு தற்போது அடுத்த சர்ச்சை கிளம்பி இருக்கிறது. பண மோசடி வழக்கில் அபிநயின் மனைவி அபர்ணாவை போலீசார் தற்போது தேடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சு. இவர் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். சின்னத்திரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பும் கொடுத்து வருகிறார் மஞ்சு. அந்த வகையில் அபிநயின் மனைவி அபர்ணாவிற்கும் மஞ்சுவிற்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அபர்ணா வைத்திருக்கும் ஜவுளி கடைக்கு மஞ்சு ஆடைகளை வடிவமைத்து சப்ளை செய்து வந்துள்ளார். ஜெமினி கணேசன் பேரன் என்பதால் அபிநய் மீதும் அவரது மனைவி அபர்ணா மீதும் மிகுந்த மரியாதையோடு பழகி வந்துள்ளார் மஞ்சு. இந்த நிலையில் மஞ்சுவின் மூத்த மகள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அந்தப் பெண் விரும்பிய கல்லூரி கிடைக்காத வருத்தத்தில் இருந்திருக்கிறார் மஞ்சு. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அபர்ணா தனக்கு தெரிந்த மருத்துவ கல்லூரியில் நண்பர் இருப்பதாகவும் 20 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் அந்த மருத்துவ கல்லூரியிலேயே இடம் வாங்கிவிடலாம் என்றும் மஞ்சுவிடம் கூறி இருக்கிறார். முதற்கட்டமாக ஐந்து லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து சீட்டை புக் செய்து விடுபடியும் கூறி இருக்கிறார் அபர்ணா.

பின்னர் கல்லூரியில் சேரும் பொழுது மீதி பணத்தை கொடுத்தால் போதும் என்று மஞ்சுவை மூளைச்சலவை செய்திருக்கிறார் அபிநயின் மனைவி அபர்ணா. மேலும் தனது நண்பர் வங்கி கணக்கிற்கு முதல் தவணையாக 5 லட்சம் ரூபாயை அனுப்பும்படி கூறிய அபர்ணா. ஐந்து நாட்கள் கழித்து வாட்ஸ் அப்பில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாக மஞ்சுவிற்கு சான்றிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த சான்றிதழ் உடன் அந்த கல்லூரிக்கு சென்ற மஞ்சு, இது போலியான சான்றிதழ் என்று தெரிந்து கொண்ட பின்பு அபர்ணா வைத்திருக்கும் ஆடையகத்திற்கு சென்று இது குறித்து கேட்டிருக்கிறார். அப்போது பொறுப்பில்லாமல் பதிலளித்த அபர்ணா தனது நண்பரின் வங்கிக் கணக்கில் தானே பணத்தை செலுத்தினாய், அவரிடம் சென்று வாங்கி கொள் என்று சொல்லி மஞ்சுவை அலைக்கழித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தான் நடத்தி வரும் ஆடையகத்தையும் மூடிவிட்டு அபர்ணா தலைமறைவாகி இருக்கிறார். இதையடுத்து மஞ்சு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அந்த அடிப்படையில் அபர்ணா, அவரது நண்பர் அஜய் ஆகியோர் மீது மோசடி, போலியான ஆவணத்தை தயாரித்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போல் வேறு யாருடனும் பண மோசடி செய்திருக்கிறாரா என்றும் தீவிரமாக மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்ழ மேலும் அவரை விரைந்து கைது செய்யவும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஜெமினி கணேசனின் பேரனின் மனைவியே இப்படி ஒரு மோசடி செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த செய்தியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Polimer News