
கள்ளக்குறிச்சிக்கு அருகில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியின் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதி கொண்டனர். இந்த விபத்தினால் பயணிகள் 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அவர்களுடைய அலறல் சத்தம் கேட்ட பின்னரே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து , விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க முயற்சி செய்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
பேருந்துகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு அழைத்து செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.