ராதிகாவின் பொன்னி சி/ஓ ராணி சீரியல் நடிகருக்கு திடீரென நடந்து முடிந்து திருமணம்.! வெளியான புகைப்படம் இதோ

வெளியிட்டது

நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் ப்ரீத்தி சஞ்சீவ் நடிப்பில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பொன்னி சி/ஓ ராணி’ என்கிற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ஜுன் ஆறுமுகத்திற்கு இன்று திருமணம் நடைபெற்று இருக்கிறது. தனது நீண்ட நாள் காதலியை அவர் கரம் பிடித்திருக்கிறார்.

ராதிகாவின் பொன்னி சி/ஓ ராணி சீரியல் நடிகருக்கு திடீரென நடந்து முடிந்து திருமணம்.! வெளியான புகைப்படம் இதோ 1
பொன்னி சி/ஓ ராணி என்கிற சீரியலில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அர்ஜுன் ஆறுமுகம். இவர் பல வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் சென்னையில் வைத்து இவருடைய திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்திருக்கிறது.

திரைப் பிரபலங்கள் மற்றும் சக நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் நெருங்கிய குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இவர் தனது திருமணத்தை எளிமையான முறையில் முடித்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

அர்ஜுன் ஆறுமுகம் மாடலாக தனது வாழ்க்கை தொடங்கியவர். பின்னர் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். ஏற்கனவே பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதிகாவின் ‘தாயம்மா’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

இந்த நிலையில் அவர் தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, “புதிய தொடக்கம் அன்பு மற்றும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு கணத்திலும் உன்னை நேசிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்” என பகிர்ந்திருக்கிறார். பலரும் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்