Categories: சினிமா

மனைவியை அழைத்துக்கொண்டு இரவு பார்ட்டிக்கு வந்த நடிகர் Arunvijay..! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!

வெளியிட்டது

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். சினிமாவில் எளிதாக அறிமுகமாகி இருந்தாலும் வெற்றி என்பது இவருக்கு எட்டாமல் இருந்தது. தொடர்ந்து சினிமாவில் வெற்றிபெற போராடிய இவருக்கு தோல்விகள் மட்டுமே பரிசாக கிடைத்து இருந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் இவரின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்டது.

மனைவியை அழைத்துக்கொண்டு இரவு பார்ட்டிக்கு வந்த நடிகர் Arunvijay..! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..! 1

இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அருண்விஜய். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான யானை மற்றும் மிஷன் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதனை தொடர்ந்து இவர் ரெட்டை தலை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது நடிகர் விஜய் தனது மனைவியுடன் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து உள்ளார். மேலும் அங்கு ஏற்பாடு செய்து இருந்த இரவுபார்ட்டியிலும் கலந்துகொண்டு உள்ளார். உடன் அவரது அக்காவும் கலந்துகொண்டு உள்ளார். இந்த புகைப்படங்களை அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்