Categories: சினிமா

மகளின் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆர்யா..! வைரலாகும் புகைப்படங்கள்..! ரசிகர்கள் வாழ்த்து..!

வெளியிட்டது

அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ஆர்யா. தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து உள்ளார். வட்டாரம், கலாபா காதலன், பட்டியல் என அறிமுகம் ஆகிய வருடங்களிலேயே அடுத்தடுத்து படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார். பின்னர் இவர் எதிர்பார்த்த திருப்பு முனை அறிமுகமாகிய 2 வருடங்களிலேயே சினிமாவில் ஏற்பட்டது.

மகளின் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆர்யா..! வைரலாகும் புகைப்படங்கள்..! ரசிகர்கள் வாழ்த்து..! 1

இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்து அனைவரையும் தனது நடிப்பு திறமையால் ஆச்சரியப்பட வைத்தார்.இவருக்கு இப்படம் மிகப்பெரிய உயரத்தை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகையாக உருவெடுத்த இவர் தொடர்ந்து சினிமாவில் ஹிட் படங்களை கொடுக்க தொடங்கினார். இவர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய வரவேற்பினை பெற்று உள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இவர் நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு சயீஷா குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மகளின் மூன்றாவது பிறந்தநாளை இருவரும் ஒன்றாக கொண்டாடி புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்