காதலியை அறிமுகம் செய்து வைத்த வானத்தை போல ராஜபாண்டி.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்து வரும் நடிகர் அஸ்வின் கார்த்திக் தன்னுடைய காதலியை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் வானத்தைப் போல. அண்ணன் தங்கையின் பாசத்தை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவதால் இந்த கதைக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக ஸ்ரீகுமார் கணேஷ், மாடன்யா ஆனந்த், அஸ்வந்த் திலக், டெப்ஜனி மோடக் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இதில் ராஜபாண்டி துரைசாமி என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் அஸ்வின் கார்த்திக் நடித்து வருகிறார். இந்த தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் 6.6 மில்லியன் பார்வையாளர்களை பதிவு செய்து தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தது.

காதலியை அறிமுகம் செய்து வைத்த வானத்தை போல ராஜபாண்டி.! அவரே வெளியிட்ட புகைப்படம்.! 1

இந்தத் தொடரில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் கார்த்திக் தற்போது தனது காதலியை அறிமுகம் செய்திருக்கிறார். அஸ்வின் கார்த்திக்கின் ரோல் ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோல் போல காட்டப்பட்டது. பின்னர் பாசிட்டிவாக அந்த ரோல் மாற்றப்பட்டதால், இந்த சீரியலில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த நிலையில் அஸ்வின் கார்த்திக் இன்று தனது instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அவர் தனது காதலியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அஸ்வின் கார்த்திக்கின் காதலி மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரியும் காயத்ரி ஞானசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்த அவரது காதலி காயத்ரி, “இனி நான் உன்ன, என் கண்ண போல பார்த்துக்க போறேன்” என்ற சினிமா பாடல் வரிகளுடன் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் அஸ்வின் கார்த்திக் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்கிற தொடர் மூலமாக தான் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் இவருக்கு விஜய் தொலைக்காட்சியிலேயே பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரண்மனைக்கிளி, ரெக்க கட்டி பறந்த மனசு, கல்யாணம் முதல் காதல் வரை, எங்கேயும் சமையல், குலதெய்வம், பிரியமானவள், சரவணன் மீனாட்சி போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்