தனது இரட்டை மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.! இதோ புகைப்படங்கள்.!

பிரபல பின்னணி பாடகி சின்மயி தற்போது தனது இரட்டை குழந்தைகளை முதன்முதலாக தனது ரசிகர்களுக்காக காட்டியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் “ஒரு தெய்வம் தந்த பூவே” என்கிற பாடலை பாடியதன் மூலமாக தமிழக மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் பின்னணி பாடகி சின்மயி.

தனது இரட்டை மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.! இதோ புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

அதன் பின்னர் இவர் பல படங்களில் பல பாடல்களை பாடி இருக்கிறார். தனது மெல்லிய குரலாலும் மெலடி பாடல்களாலும் தமிழக மக்களின் மனங்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் சின்மயி. இது மட்டும் இல்லாமல் பல நடிகைகளுக்கு பின்னணியும் பேசியிருக்கிறார். பூமிகா, வேதிகா, கங்கணா ராவத், சமீரா ரெட்டி, காஜல் அகர்வால், நீத்து சந்திரா, தமன்னா, ராதிகா ஆப்தே, திரிஷா, சமந்தா, டாப்ஸி, அனுஷ்கா, நயன்தாரா, அமலாபால் எமி ஜாக்சன் போன்ற பல பிரபலங்களுக்கு பின்னணி பேசி இருக்கிறார் சின்மயி.

தனது இரட்டை மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.! இதோ புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

பின்னணி பாடுவது மற்றும் டப்பிங் என்று பிசியாக இருந்து வந்த அவர் வைரமுத்துவின் சர்ச்சையில் சிக்கினார். வெளிநாட்டில் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார். அந்த பிரச்சனையை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே வருகிறது. இத்தனை நாட்கள் ஆகியும் அந்த பிரச்சனை ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், உலகத்தின் எந்த மூலையில் எந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியான பிரச்சனை நடந்தாலும் வைரமுத்துவை அதனுடன் தொடர்பு படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  விஜயின் நடிப்பை கழுவி ஊற்றிய நடிகர், "மன்னிச்சிடுங்க நண்பா" தெரியாமல் பேசிட்டேன்..மன்னிப்பு கேட்ட டாம் சாக்கோ

தனது இரட்டை மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.! இதோ புகைப்படங்கள்.! 5
இந்த சர்ச்சைகள் எல்லாம் ஒரு புறம் இருக்க சின்மயிக்கும் நடிகர் ராகுலுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். சின்மயி வாடகை தாய் முறையில் குழந்தை பெற்று இருப்பதாகவும், அவருக்கு வயிறு பெரிதாகவே இல்லை என்றும் நெட்டிசன்கள் வதந்தியை பரப்பி வந்தனர்.

விளம்பரம்

தனது இரட்டை மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.! இதோ புகைப்படங்கள்.! 7

ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அவர்களுக்கு ட்ரிப்தா, ஷர்வாஸ் என பெயர் வைத்திருப்பதாக புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்திருந்தார்.

விளம்பரம்

தனது இரட்டை மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.! இதோ புகைப்படங்கள்.! 9
இத்தனை நாட்களாக பொதுவெளியில் தனது பிள்ளைகளை காட்டாமல் இருந்து வந்த சின்மயி தற்போது முதல் முறையாக மகன்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

தனது இரட்டை மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.! இதோ புகைப்படங்கள்.! 11

விளம்பரம்

அதில் இருவரும் நன்றாக வளர்ந்து இருக்கின்றனர். இருவருக்கும் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது தனது கணவருடன் வீடியோ கால் பேசும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் குழந்தைகள் விளையாடுவது போன்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

தொடர்புடையவை  KGF 3 எப்போன்னு தெரியுமா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் | KGF

தனது இரட்டை மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.! இதோ புகைப்படங்கள்.! 13
அந்தப் புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளும் குழந்தைகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களையும் சின்மயியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment