Categories: சினிமா

பாரதிராஜா அறிமுகப்படுத்திய பிரபல தமிழ் நடிகர் காலமானார்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

வெளியிட்டது

30 வருடங்களாக படுத்த படுக்கையில் இருந்த பிரபல தமிழ் நடிகர் இன்று காலமாகி இருக்கிறார். அவரது இறப்புக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘என்னுயிர் தோழன்’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் பாபு. நான்கு படங்களில் மட்டுமே நடித்திருந்த அவர் ஒரு சண்டை காட்சியில் ஏற்பட்ட விபத்தில் மூலமாக படுத்த படுக்கையாக மாறிப்போனார். 30 ஆண்டுகளாக படுக்கையில் இருந்த அவருக்கு நடிகர்கள் பலரும் உதவி செய்து வந்த நிலையில் இன்று அவர் காலமாகி இருக்கும் செய்தி ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதிராஜா அறிமுகப்படுத்திய பிரபல தமிழ் நடிகர் காலமானார்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! 1
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடிகர்கள் இருக்கின்றனர். கிராமத்து கதைக்களங்களும் எதார்த்தமான நடிப்பையும் வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களாக உயர்ந்தவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் ‘என் உயிர் தோழன்’ என்கிற படத்தில் அறிமுகமானவர்தான் பாபு. 1990 ஆம் ஆண்டு இந்த வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அடுத்து மூன்று படங்களில் நடித்தார். பெருங்குடி, தாயம்மா, பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. முன்னணி நடிகராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த இந்த நிலையில் இவர் ஐந்தாவது படமான ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.


மிகவும் கடினமான சண்டைக் காட்சி என்பதால் டூப் போட்டு நடிக்க படக் குழுவினர் கூறியபோதும் தானே அந்த காட்சியில் நடித்தார். மாடியில் இருந்து விழும் காட்சிகள் தவறான இடத்தில் குதித்ததால் அவரின் முதுகெலும்பு உடைந்தது. இதை சரி செய்ய பல ஆபரேஷன் செய்த போதும் அவர் உயிர் வாழ முடிந்த்தே தவிர நடக்க முடியவில்லை. 2
30 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த அவர் பல நடிகர்களிடம் உதவி கேட்டு வந்தார். சமீபத்தில் கூட பாரதிராஜா அவரை நேரில் சந்தித்து இருந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டதாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இழப்பு ரசிகர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்