
தனுஷ் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து பயபக்தியுடன் சாமியை வணங்கினர். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்து பிரசாதங்கள் அளிக்கப்பட்டது. தனுஷ் வந்த தகவல் அறிந்ததும் அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
நடிகர் தனுஷுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது. இதனால் கோவில் பகுதியில் நெரிசலும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி தனுசை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கோம்பைப்பட்டியில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடையில் பழனி கோவிலுக்கு சென்று அவர் சாமி கும்பிட்டார். தனுசுடன் சுருளி படக்குழுவினரும் சென்றனர். தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.