கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை.! இலக்கியா சீரியலை விட்டு திடீரென வெளியேறிய நடிகர்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் இருந்து தற்போது நடிகர் ஒருவர் விலகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெடுந்தொடர்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருகிறது சன் தொலைக்காட்சி. 1990களின் இறுதியில் தொடங்கி தற்போது வரை பல குடும்பப் பாங்கான சீரியல்களை ஒளிபரப்பி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை.! இலக்கியா சீரியலை விட்டு திடீரென வெளியேறிய நடிகர்.! 1

 

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா தொடர் விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. மத்திய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த முக்கியமான தொடரில் ஹீமா பிந்து இலக்கியவாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ரூபா ஸ்ரீ, சுஷ்மா நாயர், ஜெய் ஸ்ரீனிவாசா, காயத்ரி பிரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஹீரோவிற்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெய் ஸ்ரீனிவாசா தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதை அறிவித்திருக்கிறார். ஜெய் ஸ்ரீனிவாஸ் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் சுந்தரி சீரியலில் சித்தார்த் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் தான் இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதை instagram பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதில், “அனைவருக்கும் வணக்கம், இனியா சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன், இந்த சீரியலில் கார்த்தி கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி, ஹீமா பிந்து, நந்தன், ரூபா ஸ்ரீ ஆகியோரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இவருக்கு பதிலாக தற்போது சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் நடிக்க இருக்கிறார். இத்தனை நாட்களாக இலக்கியா சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஜெய்க்கு சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மீனா சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த இரு காரணங்களாலும் தற்போது இலக்கியா சீரியலில் இருந்து நடிகர் ஜெய் விலகி இருப்பதாக கூறப்படுகிறது.! அவருக்கு பதிலாக நடிகர் அரவிந்த் தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் ஜெய் சுந்தரி சீரியலில் சித்தார்த் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுந்தரி சீரியலை விட்டு ஜெய் விலகாமல் இலக்கியா சீரியலை விட்டு மட்டுமே விலகி இருக்கிறார். அதேபோல நடிகர் அரவிஷும் சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்