பாக்யலட்சுமி சீரியலை விட்டு அதிரடியாக விலகும் ரித்திகா.? இதுதான் காரணமா? தீயாக பரவும் தகவல்.!

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகை ரித்திகா விரைவில் வெளியேற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் இதற்கு முன்பாக ராஜா ராணி சீசன் 1 இல் நடிகர் சஞ்சீவுக்கு தங்கையாக கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 2வில் ஒரு போட்டியாளராக பங்கு எடுத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ரித்திகாவுக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. இவர் சமீபத்தில் தன்னுடன் பணியாற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் வினு நாராயணன் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரளாவில் எளிமையாக வைத்து திருமணம் நடைபெற்றது. சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக வரவேற்பு நடைபெற்றது இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்யலட்சுமி சீரியலை விட்டு அதிரடியாக விலகும் ரித்திகா.? இதுதான் காரணமா? தீயாக பரவும் தகவல்.! 1
தற்போது ரித்திகா மாலத்தீவிற்கு ஹனிமூன்க்கு சென்று இருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரித்திகாவிற்கு அவரது கணவர் மாலத்தீவில் வைத்து சர்ப்ரைஸ் ஒன்றை செய்திருக்கிறார். கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர் கேக் வெட்டி ஊழியர்களுடன் ரித்திகாவிற்கு சர்ப்ரைஸ் ஒன்றை செய்திருந்தார். கணவருடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ரித்திகா, குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்காக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் கணவனை இழந்த இளம் வயது மனைவியாக, குழந்தை வைத்துக்கொண்டு கணவனை இழந்த இளம் பெண்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா.

விளம்பரம்
தொடர்புடையவை  பிக்பாஸ்க்காக 2 முக்கிய சீரியல்களை முடிக்க உள்ள விஜய் டிவி..! எந்த சீரியல்னு பாருங்க.!

பாக்யலட்சுமி சீரியலை விட்டு அதிரடியாக விலகும் ரித்திகா.? இதுதான் காரணமா? தீயாக பரவும் தகவல்.! 3
இந்த கதாபாத்திரத்தின் மூலமாக பலரது உள்ளங்களையும் கவர்ந்திருக்கிறார் ரித்திகா. ஆனால் தற்போது திருமணம் ஆகிவிட்டதால் நாடகத்திலிருந்து விலகி குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பை ரித்திகாவே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Cine Samugam

விளம்பரம்

Leave a Comment