நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிய இருப்பதாக அறிவித்து உள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்து உள்ளது. மேலும் விவாகரத்து கேட்டு நடிகர் ஜெயம் ரவி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்நிலையில் முன்னதாகவே கணவருக்கு அறிக்கை வெளியிட்டு இருந்த ஆர்த்தி, தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,நான் அமைதியாக இருப்பதற்கு காரணம் குற்ற உணர்ச்சியோ பலவீனமோ இல்லை, என்னை தவறாக காட்ட முயற்சி செய்த சிலருக்கு நான் கண்ணியமாக பதிலளிக்காமல் இருந்தேன். நீதித்துறை உண்மையை கொண்டு வரும் என கூறியுள்ளார். மேலும் நான் முந்தய அறிக்கையில் சொன்ன விஷயம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. விவாகரத்து செய்தி தெரியாது என்று நான் கூறவில்லை, விவாகரத்து அறிவிப்பு இருவரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது என்று சொல்வது பொய் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதை பற்றி ஜெயம் ரவியிடம் தனியாக பேச தற்போது வரை தயாராக உள்ளேன் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனக்கு திருமணம் மீது மரியாதை அதிகம் உள்ளது, எனவே நான் யார் மரியாதையும் கெடுக்கும் அளவில் நடந்துகொள்ள மாட்டேன், குடும்பத்தின் நலன் மீது தான் என்னுடைய அக்கறை மற்றும் கவனம் உள்ளது. என்னை கடவுள் அருள் வழிநடத்தும் என கூறியுள்ளார்.