விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்தளவுக்கு ரசிகர்களை வெகுவாக இந்த நிகழ்ச்சி கவர்ந்து உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருப்பதே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எந்த நிகழ்ச்சியும் இத்தகைய வரவேற்பினை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளராக பிரியங்கா வெற்றிபெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னை சுற்றி இருப்பவர்களை சௌகரியமாக வைத்துக்கொள்ளவே விருப்பபடுவதாகவும், அதில் தான் தனக்கு பெருமை என கூறி உள்ளார். மேலும் கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தோல்வியடைந்தேன் ஆனால் தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு குக் வித் கோமாளி கோப்பை தன்னிடம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். சமயலறையில் தனக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்களுக்கும், ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

இந்த பதிவில் நெட்டிசன்கள் சிலர், ப்ரியங்காவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த டைட்டில் உங்களுக்கு தான் கொடுப்பார்கள் என முன்னாடியே தெரியும் எனவும், விஜய் டிவி இதனை சொல்லி வைத்து நடத்தி குக் வித் கோமாளி பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டதாக ரசிகர்கள் கருத்துக்களை ப்ரியங்காவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram