‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘திருமதி செல்வம்’ சீரியல் நடிகர்.! இனிமே காமெடிக்கு பஞ்சம் இருக்காது.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தற்போது புது நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதனால் இனி இந்த சீரியலில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவி மட்டுமல்லாது சின்னத்திரையிலேயே நம்பர் ஒன் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். தற்போது இந்த சீரியலின் கதைப்படி மூத்த மகன் மனோஜ் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் மாட்டிக் கொள்கிறார்.

'சிறகடிக்க ஆசை' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'திருமதி செல்வம்' சீரியல் நடிகர்.! இனிமே காமெடிக்கு பஞ்சம் இருக்காது.! 1

இத்தனை நாட்களாக வேலை வெட்டிக்கு எதுவும் செல்லாமல் பார்க்கில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரை முத்து வீடியோ எடுத்து வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு காண்பிக்கிறார். இதனால் மனோஜ் மிக அவமானமாக உணர்கிறார்.

தொடர்ந்து முத்து மனோஜை குத்திக்காட்டும் விதமாகவே தினமும் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் முத்துவிற்கும் மனோஜின் மனைவி ரோகிணிக்கும் சண்டை எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழகிய குடும்பம், விறுவிறுப்பான கதைக்களம், ஒரே விஷயத்தை பல நாட்களாக இழுக்காமல் உடனடியாக முடித்துவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்வது என்று ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் முடிந்து விட்டதால் தற்போது இந்த நிகழ்ச்சி இனி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் தனக்கு பணக்கார அப்பா என்று ரோகிணி பொய் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் பொங்கல் சீர் கொடுப்பதில் இருந்து தப்பிக்க ஒருவரை ஏற்பாடு செய்கிறார். அதில் ரோகிணியின் உறவினராக சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரபல நடிகர் ஜெயமணி. இவர் ஏற்கனவே திருமதி செல்வம் சீரியல் செல்வத்தின் தகப்பனாக ‘பூங்காவனம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்த நிலையில் தற்போது இவர் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் என்ட்ரி கொடுப்பதால் இனி காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்