Categories: சினிமா

விஜயின் மாநாடு குறித்த கேள்வி..? கடுப்பாகி பதில் சொன்ன நடிகர் ஜீவா..!

வெளியிட்டது

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் இளைய மகன் தான் ஜீவா. தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்து உள்ளார். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 2003ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து படங்கள் நடித்து வந்தார்.

விஜயின் மாநாடு குறித்த கேள்வி..? கடுப்பாகி பதில் சொன்ன நடிகர் ஜீவா..! 1

சமீபகாலமாக ஜீவாவுக்கு சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு ஜீவா நடித்து வருகிறார். ஒரு காலத்தில் கோ, ராம் என பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் தற்போது வெற்றிக்காக போராடி வருகிறார்.இவர் நடிப்பில் வெளியான பிளாக் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

இப்படத்தின் வெற்றிகொண்டாட்டத்தில் நேற்று ஜீவா கலந்துகொண்டு உள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், விஜயின் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர் கலந்துகொள்வேன் என கூறி உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்