விக்ரமிடம் லீவு கேட்டு கார்த்திக் எழுதியுள்ள காமெடி கடிதம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத் தேவனாக கார்த்திக்கும் நடித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் கதைப்படி, ஆதித்த கரிகாலன் தஞ்சாவூரில் இருந்து விலகி வடதிசை படைகளுக்கு தளபதியாக இருப்பார். காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை ஒன்றை அமைத்து அதில் தங்கியிருப்பார். அவரது தந்தை சுந்தர சோழனும், தாயும், தங்கை குந்தவையும் தஞ்சாவூர் அருகே பழையாறை அரண்மனையில் இருப்பார்கள். தனது தந்தை மற்றும் தங்கைக்கு ரகசிய ஓலை ஒன்றை கொடுத்து அனுப்பவே நண்பனான வந்தியத்தேவனை, ஆதித்த கரிகாலன் தஞ்சாவூருக்கு அனுப்பி வைப்பார். இங்கிருந்து தான் பொன்னியின் செல்வன் கதையே துவங்கும். வந்தியத் தேவன் எப்படி தஞ்சாவூரை வந்து அடைகிறான், அப்போது ஏற்படும் துன்பங்கள் என்ன என்பதையெல்லாம் கல்கி சுவாரஸ்யமாக எழுதி இருப்பார்.

சோழர்களின் அரியணைக்கு வரும் ஆபத்துக்களையும், அதிலிருந்து சோழ மன்னர்கள் போர் புரிந்து எவ்வாறு தங்கள் அரியணையை மீட்டார்கள் என்பது பற்றியுமான கதை. குறிப்பாக பாண்டிய நாட்டு சூழ்ச்சியாளர்களிடமிருந்து எவ்வாறு அரியணையை காத்தார்கள் என்பது பற்றிய கதை. இதில் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய தஞ்சையில் இன்னும் சோழ மன்னர்களின் அரண்மனைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்றவை காட்சிக் கூடங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜராஜ சோழன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பெருவுடையார் கோவில் உள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் பெருவுடையார் கோவிலுக்கு செல்ல விரும்பியுள்ளார்.
இது குறித்து ட்வீட் ஒன்றை போட்ட அவர், தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா! என்று த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவியை டேக் செய்து இருந்தார். அதற்கு காமெடியாக பதிலளித்துள்ள கார்த்தி, இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. எனக்கு காய்ச்சலர அடிக்கிறது. work from home வேலை வேண்டும். வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me. என்று காமெடியாக பதிலளித்துள்ளார்.