பேட்டியின் போதே கைகளில் இருந்து வழிந்த ர_த்தம்.! கதறி அழுத மனைவி..உணர்வுபூர்வமான தருணங்கள்.!

ஒரே இரவில் வைரலான தம்பதிகள் தான் தூத்துக்குடியைச் சேர்ந்த பாரதி மற்றும் சீனி ராஜா தம்பதிகள். இவர்கள் நீயா நானாவில் கலந்து கொண்ட பிறகு ஒரே இரவில் வைரல் ஆகிவிட்டனர். படிக்காத கணவர்கள் Vs அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் என்ற தலைப்பில் நீயா நானாவில் விவாதம் நடந்தது. அப்போது வீட்டில் தனது கணவரை கலாய்ப்பது போல, படிக்காதவர் என்ற ரீதியில் பாரதி தனது கணவர் சீனி ராஜாவை கலாய்த்து பேசினார். ஆனால் இது பொதுவெளியில் வேறு மாதிரி போய் பலரும் அந்தப் பெண்ணை திட்ட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இருந்து அந்தப் பெண் மீதான விமர்சனம் எல்லை மீறி போனது. இதனால் அவர்களின் குடும்ப பின்னணியை அறிய பல youtube சேனல்கள் அவர்களை பேட்டி எடுத்தனர். அப்போதுதான் அவர்களின் உண்மையான பின்னணி தெரிய வந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

பேட்டியின் போதே கைகளில் இருந்து வழிந்த ர_த்தம்.! கதறி அழுத மனைவி..உணர்வுபூர்வமான தருணங்கள்.! 1

விளம்பரம்

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த சீனி ராஜா முதலில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னாளில் இவருக்கு பாரதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இருவரும் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில் தனியாக தொழில் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி பாரதியின் நகைகளை ஒன்று ஒன்றாக வாங்கி அடகு வைத்து தொழில்களை ஆரம்பித்துள்ளார் சீனி ராஜா. முட்டை கடை, தக்காளி வியாபாரம், அரசி கடை, மளிகை கடை என்று ஒவ்வொன்றாக வைத்து அனைத்திலும் நஷ்டம் ஏற்படவே பிறகு மீண்டும் ஒரு மளிகை கடைக்கு வேலை சென்றுள்ளார். தினமும் 300 ரூபாய் வைத்த சமாளிக்க முடியாததால் தனது மனைவியை வேலைக்கு அனுப்பியுள்ளார். பின்னர் சீனி ராஜாவிற்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து போக, குடும்பத்தை சமாளிக்கும் பொறுப்பு பாரதியின் தலையில் விழுந்தது. இதனால் தினமும் வேலைக்கு சென்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்துள்ளார் பாரதி.

தொடர்புடையவை  இன்று பலரின் முகத்திரை கிழியப் போகுது.! யாரை சொல்கிறார் கமல்.! இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ.!

பேட்டியின் போதே கைகளில் இருந்து வழிந்த ர_த்தம்.! கதறி அழுத மனைவி..உணர்வுபூர்வமான தருணங்கள்.! 3

விளம்பரம்

நகைகளை மீட்க முடியாமல் இருவரும் மிகுந்த சிரமப்பட்டு இருக்கின்றனர். சீனி ராஜாவின் மருத்துவ செலவிற்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில், நகைகள் அனைத்தும் கடலில் மூழ்கி போய் உள்ளது. தற்போது வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்து தனது கணவனை காப்பாற்றி வருகிறார் மனைவி பாரதி. சீனி ராஜாவின் தந்தை ஓய்வு பெற்ற போதிலும், தனது மகனுக்காக பணம் செலவழித்து மருத்துவம் பார்த்து வருகிறார். இந்த நிலையில் சீனி ராஜாவிடம் பேட்டி எடுத்தபோது தன்னுடைய மனைவிதான் தன் குடும்ப பாரத்தை சுமக்கிறார். அப்பாவும் மனைவியும் இல்லை என்றால் நான் இல்லை என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்து வந்தார். மேலும் தன் மனைவி மீது வரும் விமர்சனங்களும் மீம்ஸ்களும் தனக்கு வேதனை அளிப்பதாகவும் கூறியிருந்தார்.

பேட்டியின் போதே கைகளில் இருந்து வழிந்த ர_த்தம்.! கதறி அழுத மனைவி..உணர்வுபூர்வமான தருணங்கள்.! 5

விளம்பரம்

ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாக வேலைக்கு செல்ல ஆரம்பித்த பாரதி, பின்னர் தனது கணவனின் உடல் நிலையை பார்த்துக் கொள்வதற்காக கட்டாயமாக வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டார். இதனால் அவர் மனதிலும் சில கஷ்டங்கள் இருந்துள்ளது. தனது நகைகளை அனைத்தும் கடனில் மூழ்கியதாலும், வேலையில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் மனதில் சில ஆதங்கத்துடனே இருந்துள்ளார் பாரதி. இதன் வெளிப்பாடு நீயா நானா நிகழ்ச்சியில் வெளிப்பட்டுள்ளது. ஆனால் பாரதி கூறும் போது நான் வீட்டில் எப்போதும் அவரிடம் இப்படித்தான் விளையாட்டாக பேசுவேன். அது நிகழ்ச்சி என்பதால் இவ்வளவு பூதாகரமாகிவிட்டது. ஆனால் என் கணவரை நான் இன்றளவும் நேசிக்கிறேன் என்று பேசினார். தற்போது பேட்டி ஒன்றை அளித்துக் கொண்டிருந்தபோது அவரது கைகளில் இருந்து ரத்தம் வழிந்து உள்ளது.்கேட்டபோது இப்போது தான் டயாலிசிஸ் முடித்துவிட்டு திரும்பி வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.

தொடர்புடையவை  அவங்க எனக்கு குழந்தை மாதிரி.! ரமணியம்மாள் மறைவுக்கு முதல் ஆளாக ஓடி சென்ற விஜே அர்ச்சனா.!

பேட்டியின் போதே கைகளில் இருந்து வழிந்த ர_த்தம்.! கதறி அழுத மனைவி..உணர்வுபூர்வமான தருணங்கள்.! 7

விளம்பரம்

அதைப் பார்த்து அவரது மனைவி பாரதி கண்ணீர் விட்டு அழுதார். என் குழந்தைக்காகவாது அவர் எங்களுடன் நிறைய நாட்கள் நன்றாக வேண்டும் என்று கலங்கி பேசினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Galatta Tamil

விளம்பரம்

Leave a Comment