நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என்றே நடிகர் கார்த்திக் ஒரு ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. கார்த்திக்கு சாண்டி மாஸ்டர் மீது அப்படி என்னதான் கோபம் என்று தற்போது பலருக்கும் தெரிய வந்துள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தான் விருமன. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியானதால், அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால் நல்ல வசூலை குவித்துள்ளது. ஒரு வேஷ்டியை கட்டிக்கொண்டு கார்த்திக் படங்களில் நடிக்கும் போது, அந்த படங்கள் பெரிய ஹிட் ஆவது வழக்கம். பருத்திவீரன், கொம்பன் வரிசையில் அடுத்த ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக். முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து இந்த படத்தை அவர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இவருக்கு இதுவே முதல் படம். இயக்குனர் சங்கரின் இளைய மகளான இவர், முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பையும் நடனத்தையும் வெளிப்படுத்தி மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இவர் குறுகிய காலகத்திலேயே அடுத்த அடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்கு நடன இயக்குனராக பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் இருந்தார். சாண்டி பல படங்களுக்கு கோரியோகிராப் செய்திருக்கிறார். மேலும் பல நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சொந்தமாக ஒரு நடன பள்ளியையும் வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு நடனமும் சொல்லித் தருகிறார். இவர் விருமன் படத்தில் வரும் வானம் கிடுகிடுங்க என்ற பாடலுக்கு கோரியோகிராபராக இருந்தார்.
இந்தப் பாடலில் ஒரு காட்சியில் கார்த்தி பல்டி அடித்து இருப்பார், இந்த பாடல் அதிகாலை இரண்டு மூன்று மணிக்கு படமாக்கப்பட்டதால், நடுராத்திரியில் தன்னை எழுப்பி பாடாய்படுத்தியதால் சாண்டி மாஸ்டர் மீது செல்லமாக கோபித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. இதை பாடல் வெளியீட்டின் போதே அவர் வெளிப்படுத்தி இருப்பார். தற்போது ட்வீட் ஒன்றை போட்டுள்ள கார்த்தி, நடுராத்திரி மூணு மணிக்கு எல்லாம் சம்மர் சால்ட் (பல்டி) அடிக்க விட்டாயே சாண்டி மாஸ்டர், உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்று செல்லமாக திட்டி பதிவிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த கிண்டல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவில் யுவன் சங்கர் ராஜாவை பாராட்டிய கார்த்தி, இனி எல்லா ஊர் திருவிழாவிலும் நம்ம பாட்டு கண்டிப்பாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.