ஜெயிலர் படத்திலிருந்து “காவாலா” முழு வீடியோ சாங் வெளியானது.! வீடியோ உள்ளே

ஜெயிலர் படத்திலிருந்து வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமான காவலா பாடலின் முழு வீடியோ பாடலை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வெளியான சில நிமிடங்களில் இந்த பாடல் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பலர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ஜெயிலர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் சுமார் 20 நாட்களில் 600 கோடி வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்திலிருந்து "காவாலா" முழு வீடியோ சாங் வெளியானது.! வீடியோ உள்ளே 1

விளம்பரம்

ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார் போன்ற மிகப்பெரிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மிக முக்கிய வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது அனிருத்தின் இசை தான். குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதல் சிங்கிள் பாடலாக வெளியான காவலா பாடல் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரின் மனம் கவர்ந்த பாடலாக உருவாகியிருந்தது.

தொடர்புடையவை  ஜப்பானை நோக்கி வருகிறது இரண்டு புதிய புயல்கள்!!

ஜெயிலர் படத்திலிருந்து "காவாலா" முழு வீடியோ சாங் வெளியானது.! வீடியோ உள்ளே 3

விளம்பரம்

இந்தப் பாடலை யூடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கேட்டு மகிழ்ந்திருந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து இந்த பாடலின் முழு வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வெளியான சில நிமிடங்களில் இந்தப் பாடலை பல லட்சம் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். நீங்களும் அந்தப் பாடலைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment