தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் மாதவன். “அலைபாயுதே” என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தில் நடித்துள்ளார். இஸ்ரோவில் பணி புரிந்த விஞ்ஞானி நம்பி நாராயணினின் வாழ்க்கை வரலாறு கதையில் நடித்துள்ளார். இஸ்ரோவில் பணிபுரிந்த விஞ்ஞானி நம்பி நாராயணன், இஸ்ரோவின் திட்டங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவரை பணியில் இருந்தே நீக்கி இருப்பார்கள். ஆனால் தன் மீது உள்ள குற்றச்சாட்டை தனியாளாக போராடி நிரூபித்துள்ளார் நம்பி நாராயணன். இதில் மாதவன் நடிப்பு மிக பிரமாதமாக இருந்தது என்றும் நம்பி நாராயணனாகவே வாழ்ந்து இருக்கிறார் என்றும் மாதவனை பாராட்டி வருகின்றனர். கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நம்பி நாராயணனை பேட்டி எடுப்பது போல சூர்யா நடித்து இருப்பார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் இருவரும் உரையாடினர். அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா கஜினி படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது. அந்த படம் பற்றி பேசிய மாதவன், முதலில் அந்த படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், இரண்டாவது பாதி தனக்கு பிடிக்காததால் அதை நிராகரித்துவிட்டதாகவும் கூறினார். அந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்து தான் வியப்படைந்து விட்டதாகவும் கூறினார்.
அது மட்டுமில்லாமல் காக்க காக்க படத்தில் தனக்கு நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டதாக மாதவன் கூறினார். உண்மையில் கஜினி படத்திற்காக உடலை வருத்தி நீங்கள் நடித்து இருந்தீர்கள்,அந்த சிக்ஸ் பேக் இதெல்லாம் நான் கூட அப்படி நடித்து இருப்பேனா என்று எனக்கு தெரியாது என்று மாதவன் கூறினார். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு சூர்யா நடித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் நீ என்ன மேடி பண்ணிட்டு இருக்க என்று சொல்லி நான் என்னையே கேட்டு என் உடல் முழுவதும் உறைந்துவிட்டதாகவும் அவர் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video.
Youtube Video Code Embed Credits: Indiaglitz