மனோ பாலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு.! மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்.!

நடிகரும் இயக்குனருமான மனோபாலாவிற்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. மனோபாலா விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். குணச்சித்திர வேடங்கள், காமெடி வேடங்கள் என்று பல கதாபாத்திரங்களை ஏற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகர் மனோபாலா. இவர் ஆரம்பத்தில் துணை இயக்குனராக தனது வாழ்க்கையைத தொடங்கினார். இயக்குனர் சிகரம் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார் மனோபாலா. பின்னர் இவர் ஒரு கட்டத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். 1982ஆம் ஆண்டு கார்த்தி சுகாசினி இருவரையும் வைத்து “ஆகாய கங்கை” என்ற படத்தை எடுத்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையவே அடுத்தடுத்த படங்களை இயக்கினார் மனோபாலா.

மனோ பாலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு.! மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்.! 1
பின்னர் இவர் பிள்ளை நிலா, ஊர் காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், வெற்றிப்படிகள் போன்ற பல படங்களை இயக்கினார். இறுதியாக இவர் 2002 ஆம் ஆண்டு ஜெயராம் மற்றும் வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்த நைனா படத்தை எடுத்தார். அதன் பின்னர் இவர் எந்த படங்களையும் இயக்கவில்லை. நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். நூறுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்திருக்கிறார் மனோபாலா. இது மட்டும் இல்லாமல் பல படங்களில் பின்னணி பேசியும் இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான குறிப்பிடத் தகுந்த படங்களாக இருப்பது அரண்மனை 3, நாய் சேகர், ஓ மை டாக், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களாகும். தற்போது தெலுங்கு படமான வால்டர் வீரய்யா என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் சதுரங்க வேட்டை, சதுரங்க வேட்டை பாகம் 2 போன்ற பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவற்றுடன் சேர்த்து பல சின்னத்திரை தொடர்களை இயக்கி இருக்கிறார். இதுவரை மொத்தம் 14 படங்களை இயக்கியிருக்கிறார். 19 சின்னத்திரை தொடர்களை இயக்கியிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  சட்ட நடவடிக்கை எடுப்பேன்..! எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட Shankar..! குழப்பத்தில் ரசிகர்கள்..!

மனோ பாலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு.! மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்.! 3

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய கலைஞராக இருக்கும் மனோபாலாவிற்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இன்று அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் பூச்சி முருகன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது .இன்று மாலைக்குள் மனோபாலா மீண்டும் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. பூச்சி முருகன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியானது முதல் அவர் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment